ஆபத்தான இதயத் துடிப்பு நோய்.. 55 வயது பெண்.. 3 அட்வான்ஸ் உயிர்காக்கும் செயல்முறையில் காவேரி மருத்துவமனை வெற்றி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் இயங்கிவரும் காவேரி மருத்துவமனை, மூன்று வித சிக்கலான இதய கோளாறுகளுடன் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் உயிரை காப்பாற்றியிருக்கிறது.

Advertising
>
Advertising

Chennai, 19th July 2022: 55 வயதான ராதா பாலாஜி என்னும் பெண்மணி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு myocardial infarction எனப்படும் மாரடைப்பு, bradycardia எனப்படும் இயல்புக்கு குறைவான இதய துடிப்பு மற்றும் உடலுக்கு தேவையான ரத்தத்தை இதயம் பம்ப் செய்யாததால் அசாதாரண அளவுக்கு குறையும் ரத்த அழுத்தமான cardiogenic shock ஆகிய பாதிப்புகள் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து அவருக்கு முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் வென்ட் பொருத்தும் சிகிச்சையில் இறங்கியுள்ளது மருத்துவ நிபுணர் குழு. ஆனால் அப்போதுதான் அவருக்கு வழக்கத்துக்கு மாறான இதய துடிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்திருக்கின்றனர். இதனையடுத்து அவருக்கு IABP (hemodynamic support from an intra-aortic balloon pump) உதவி தேவைப்பட்டிருக்கிறது. இந்த மாறுபாடுள்ள இதய துடிப்பை சரிசெய்ய செயற்கையாக 14 முறை external defibrillator மூலமாக அதிர்ச்சி கொடுக்கப்பட்டிருக்கிறது.

சென்னை காவேரி மருத்துவமனையின் இதய மின் இயற்பியல் மருத்துவப் பிரிவின் மருத்துவத் தலைவர் டாக்டர் தீப் சந்த் ராஜா, இந்த நடைமுறைகள் குறித்துப் பேசுகையில், “இந்த மருத்துவ நிலையானது MI-க்கு பிந்தைய VT storm என்று அழைக்கப்படுகிறது. நோயாளி storm-ன் குறிப்பிட்ட நிலையில் சிக்கியிருந்தார்.

மருந்துகள் மூலமாக அவர் சகஜ நிலைக்கு திரும்பவில்லை. மேலும், மிட்ரல் வால்வ்-ல் ஏற்பட்ட மாற்றம் மற்றும் QT syndrome மூலமாக அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனை தொடர்ந்து சிகிச்சையின் நான்காவது நாளில் அவர் ரேடியோஃப்ரீக்வென்சி அபிலேஷன் செயல்முறைக்கு (மாறுபட்ட இதய துடிப்பை ஏற்படுத்தும் செல்களை அழிக்கும் செயல்முறை) அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஹைப்ரிட் கேத் லேப் ஆப்பரேட்டிங் அறையில் 6 மணிநேரம் நீடித்த இந்த சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இதன்மூலம் அவர் ஆபத்தான நிலையில் இருந்து சகஜ நிலைக்கு திரும்பினார். இருப்பினும் எதிர்காலத்தில் அவர் இத்தகைய சிரமங்களை சந்திக்காமல் இருக்க அவருக்கு பெர்குடேனியஸ் டிஃபிபிரிலேட்டர் பொருத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கொடுக்கப்பட்ட மருந்துகளினால் அவரது உடல்நலம் சீராகி 14-ஆம் நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்" என்றார்.

டாக்டர் தீப் சந்த் ராஜா கான்பெரா மருத்துவமனைகள் மற்றும் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் கார்டியாக் எலக்ட்ரோபிசியாலஜியில் 3 ஆண்டு அட்வான்ஸ் பயிற்சி பெற்றவர் ஆவார். இதுகுறித்து பேசிய அவர்,"காவேரி மருத்துவமனையில் உள்ள அதிநவீன உள்கட்டமைப்பு, ஹைப்ரிட் கேத் லேப் மற்றும் இருதயநோய் நிபுணர்கள், இருதய மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய ஒருங்கிணைக்கப்பட்ட குழு, இந்த சிக்கலான செயல்முறைகளை நோயாளிக்கு செய்ய எனக்கு நம்பிக்கை அளித்தது. இந்த நடைமுறை இல்லாமல் குணப்படுத்தியிருக்க முடியாது" என்றார்.

காவேரி மருத்துவமனையின் முதன்மை இருதயநோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் சுந்தர் இதுபற்றி பேசுகையில், “சரியான ஆஞ்சியோபிளாஸ்டி அந்த பெண்மணியை ஒரு பெரிய மாரடைப்பு மற்றும் கார்டியோஜெனிக் அதிர்ச்சியிலிருந்து காப்பாற்றியது. செயல்முறையின் போது மற்றும் அதற்குப் பிறகு அவருக்கு மாறுபட்ட இதய துடிப்பு ஏற்பட்டபோது அது கடினமான சூழ்நிலையாக இருந்தது. கார்டியாக் எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட் ரேடியோஃப்ரீக்வென்சி அபிலேஷன் மூலம் அதனை சரி செய்தார். தேவையான உள்கட்டமைப்பு இல்லாமல் நிலைமையை நிர்வகிப்பது சாத்தியமில்லை. மருத்துவமனை குழுவின் ஆதரவும் நோயாளியின் குடும்பத்தினரின் நம்பிக்கையும் இந்த வெற்றியை அடைய எங்களுக்கு உதவியது" என்றார்.

சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் இதுகுறித்து பேசுகையில்,"நோயாளியின் உயிரை காப்பாற்ற முதன்மை பெர்குடேனியஸ் ஆஞ்சியோபிளாஸ்டி ஒரு உயிர் காக்கும் செயல்முறையாக இருந்தாலும், ஆபத்தான மாறுபட்ட இதய துடிப்பை ரேடியோஃப்ரீக்வென்சி அபிலேஷன் மூலமாக சரிசெய்வதும் அவசியமான ஒன்றாகும். ECMO, ஹைப்ரிட் கேத் ஆய்வகங்கள் மற்றும் தேவையான உள்கட்டமைப்புகளுடன் கூடிய இந்த மருத்துவமனை, சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற கார்டியாக் எலக்ட்ரோபிசியாலஜிஸ்டுகளுடன் சேர்ந்து இதுபோன்ற உடல்நல சிக்கலில் இருப்பவர்களின் உயிரை காப்பாற்ற முடியும். இந்த அற்புதமான பள்ளி ஆசிரியரின் உயிரைக் காப்பாற்றிய டாக்டர் சி சுந்தர், டாக்டர் தீப் சந்த் ராஜா மற்றும் குழுவினரை நான் வாழ்த்துகிறேன்" என்றார்.

தமிழ்நாட்டில் நான்கு இதய மின் இயற்பியல் நிபுணர்களை கொண்ட ஒரே மருத்துவமனையாக காவேரி மருத்துவமனை திகழ்கிறது. இங்கே டாக்டர் தீப் சந்த் ராஜா எஸ் கார்டியாலஜிஸ்ட் மற்றும் கிளினிக்கல் லீட் - கார்டியாக் எலக்ட்ரோபிசியாலஜி (சென்னை), டாக்டர் சக்திவேல், ஆலோசகர் எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட் (சென்னை), டாக்டர். பி விஜய் சேகர் கார்டியாலஜி மற்றும் கார்டியாக் எலக்ட்ரோபிசியாலஜி ஆலோசகர் (திருச்சி) மற்றும் டாக்டர் டி ஜோசப், ஆலோசகர் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் & எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட் (திருச்சி) ஆகியோர் சேவையாற்றி வருகின்றனர். இந்த மருத்துவமனையின் சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய கிளைகளில் முப்பரிமாண எலக்ட்ரோபிசியாலஜி நேவிகேஷன் அமைப்பு வசதி இருக்கிறது.

மாறுபட்ட இதய துடிப்புகள் குறித்து ஆலோசனைகளை பெற +91 80562 04449 என்ற எண்ணிற்கோ அல்லது heartrhythmservices@kauveryhospital.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம்.

KAUVERY HOSPITAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்