சாத்தான் ஸ்லேவா இருப்பாரோ.. பைக்கில் வந்து அம்மன் தாலியை அடித்துச் சென்ற மர்ம நபர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கரூர், 27, பிப்ரவரி 2022: அம்மன் கோவிலில் பட்டப் பகலில் தாலியை திருடிச் சென்ற மர்ம நபரின் திருட்டு சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

மர்ம நபர் 

இப்போதைய கொள்ளைக்காரர்கள் பழைய கருப்பு வெள்ளை திரைப்படங்களைப் போல், கழுத்தில் கர்சீப், முகத்தில் மரு வைத்துக் கொண்டெல்லாம் வர மாட்டார்கள், இயல்பாகவே வந்து தங்கள் கைவரிசையை காட்டிவிட்டும் மீண்டும் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக திரும்பி செல்வார்கள் என்பதற்கு உதாரணமாக கரூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அம்மன் தாலி 

ஆம், கரூர் மாவட்டம் வாங்கல் சாலையில் உள்ள புற்றுக்கண் மாரியம்மன் கோவிலுக்கு ஒருவர் பைக்கில் வருகிறார். வந்தவர் ஒரு பக்தர் போலவே முதுகில் Bag மாட்டிக்கொண்டு கோயிலுக்குள் சென்று, கருவறையில் இருந்த அம்மன் கழுத்தில் இருந்து ஒன்றரை சவரன் தங்க தாலியை பறித்து சென்று விட்டு இயல்பாக வெளியே போகிறார்.

சிசிவி காட்சிகள்..

இது தொடர்பாக கோவில் நிர்வாக இயக்குநர் அளித்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்ததுடன் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.  பட்டப் பகலில் முகமூடி இல்லாமல், உடன் திருடுவதற்கு கேங் அசிஸ்டண்ட்கள் இல்லாமல், அம்மன் கோவிலில் நுழைந்து இப்படி தாலியை திருடிச் சென்ற மர்ம நபரின் இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சாத்தான் ஸ்லேவ்

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த படத்தில் பைக்கில் வந்தும் செயினை திருடும் சாத்தான் ஸ்லேவ் என்கிற கூட்டத்தினரை, க்ரைம் போலீஸ் நாயகன் அஜித் தேடிச் சென்று, அதன் தலைவனை அழித்து மற்றவர்களை திருத்துவதாகக் காட்டப்படும்.

வெளிநாட்டில் இந்த வகையான குற்றங்களை செய்யும் கொலை, கொள்ளை கேங் மிக பிரபலம். இப்படி சாத்தான் ஸ்லேவாக இல்லையென்றாலும் தமிழகத்திலும் பைக்கில் வந்து செயினை அறுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகும் திருடர்களை அங்கங்கே காண முடிகிறது. 

CCTV, KARUR, CHAIN SNATCHING, ROBBERY, TEMPLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்