‘குடும்பம் நடத்த வரமறுத்த காதல் மனைவி!’.. ‘கணவர் செய்த விபரீத காரியம்’.. கரூரில் நடந்த பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கரூரில் சேங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கும் மாயமணி மலர் என்கிற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு காரணமாக சில பிரச்சினைகள் எழுந்தன. இதனால் சில தினங்களுக்கு முன்புதான் மாயமணி மலர் ராஜ்குமாரிடம் கோபித்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது. மனைவி மாயமணி மலர் ராஜ்குமார் பலமுறை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்து போன ராஜ்குமார், அப்பகுதியில் இருக்கும் மின்மாற்றி ஒன்றின் மீது ஏறி அங்கிருந்த மின் கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளார். இவரை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் ராஜ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்ததை அடுத்து, உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் அவரை சேர்த்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘திருநங்கையாக மாறிய கணவர்’... ‘ஜீவனாம்சம் கேட்ட மனைவி’... ‘நீதிமன்றம் அளித்த தீர்ப்பு’... சென்னையில் நடந்த சம்பவம்!
- ‘என் பொண்டாட்டியும், பொண்ணும் சேர்ந்துதான் என்ன கொளுத்தினாங்க....’ அதிர வைக்கும் மரண வாக்குமூலம்...!
- ‘யாருமே என்ன கண்டுக்கல’.. நள்ளிரவு வீட்டுக்குள் நடந்த பயங்கரம்.. முதியவர் சொன்னதை கேட்டு ‘ஷாக்’ ஆன போலீஸ்..!
- ‘போதையில் மனைவியுடன் தகராறு!’.. ‘அறைக்குள் சென்று பூட்டிக்கொண்ட கணவர்’.. காவலர்களின் சமயோஜிதத்தை ‘நேரில் அழைத்து பாராட்டிய’ காவல் ஆணையர்!
- ‘கல்யாணமாகி 6 மாசம் ஆச்சு’.. ‘இப்போ வந்து இப்டி சொல்றீங்க’.. கணவன் சொன்ன பதிலால் ‘ஷாக்’ ஆன மனைவி..!
- ‘சம்பள பணத்துக்கு ஒழுங்கா கணக்கு காட்டல’.. கோபத்தில் கணவர் செய்த கொடூரம்.. நாமக்கல் அருகே அதிர்ச்சி..!
- ‘ஆறு பிள்ளைகள் இருந்தும்’... ‘கண் கலங்கி நின்ற கணவர்’... ‘கைகோர்த்து துணிச்சல் முடிவு எடுத்தப் பெண்’!
- ‘குவைத்திலிருந்து திரும்பிய கணவர்’... ‘வீட்டுக்கு வரும் முன்னரே’... ‘ஒட்டுமொத்த குடும்பத்திற்கு நடந்தேறிய பயங்கரம்’... 'கதறித் துடிக்கும் மனைவி'!
- “வரதட்சணை கேட்டு துன்புறுத்துறாங்க!”.. ‘பிளிப்கார்ட் இணை நிறுவனர் மீது’ மனைவி பரபரப்பு புகார்!
- ‘மனைவியை கொலை பண்ணிட்டேன்’.. ‘நானும் தற்கொலை பண்ணப்போறேன்’.. மாமனாரை மிரளவைத்த ‘போன்கால்’!