'எங்க புள்ளையே போயிட்டான்!.. அதனால'... உயிரிழந்த ஒரே மகனின் நினைவால்... பாசப் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!.. நெஞ்சை உலுக்கும் உண்மை சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மகனை இழந்த துயரத்தில் ரயில் முன் பாய்ந்து பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி எழில் நகரை சேர்ந்தவர்கள் சேகர்- கிருஷ்ணவேனி தம்பதியினர். சேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி செய்யும் காலத்தில் மிகவும் நேர்மையாக செயல்பட்டதால் இவருக்கு நல்ல பெயர் உண்டு. இவர் மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் மரக்கன்று நடுதல், கோயில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு உதவி செய்வது என சமூக பணிகளைச் செய்து வந்தனர்.
இதற்கிடையில், இவர்களின் ஒரே மகன் பாலச்சந்திரன் மூன்றரை ஆண்டுகளுக்கு முன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக, சேகர்-கிருஷ்ணவேனி தம்பதி மன உளைச்சலில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை இருவரும் கரூர்-திண்டுக்கல் ரயில் பாதையில் வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், இருவரது உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்காக உயிரை மாய்த்துக் கொண்ட மகனின் நீங்கா நினைவால், பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கல்யாண மேடையில் இருந்த மணப்பெண்... கல்யாணத்துக்கு வந்த முன்னாள் காதலன்!'... மணப்பெண் எடுத்த அதிரடி முடிவால்... கதிகலங்கிப்போன திருமண மண்டபம்!!
- தாய், மனைவி, 2 குழந்தைகளுடன்... ‘ஒரே’ பைக்கில் ‘சுப’ நிகழ்ச்சிக்காக சென்றபோது... இளைஞரின் ‘அலட்சியத்தால்’ நேர்ந்த ‘கோர’ விபத்து...
- ‘தந்தையின்’ கஷ்டங்களை ‘கவிதையாக’ சொன்ன சிறுவன்... ‘பாராட்டுகளோடு’ திரும்பியபோது காத்திருந்த ‘பேரதிர்ச்சி’... ‘கலங்கவைக்கும்’ சம்பவம்...
- சமையலறையில் ‘மண்டைஓடு’, மெழுகுவர்த்தி... ‘மாணவி’ மீதான காதலால்... ‘சினிமா’ பாணியில் வீட்டிற்கே சென்று... ‘பேராசிரியர்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...
- செல்போனுக்கு வந்த ‘ஐ லவ் யூ’ மெசேஜ்.. நண்பனின் ‘காதலுக்காக’ பேசிய மெக்கானிக்.. சேலம் அருகே நடந்த சோகம்..!
- நீ தான் என் 'செகண்ட்' பொண்டாட்டி...! 'ஊருக்கு வாங்க மாப்ள, அவளை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்...' வசமாக வந்து சிக்கிய வாலிபர்...!
- 'தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காதலி...' 'காதலியின் முகத்தை கடைசியாக பார்க்க வந்த இடத்தில்...' நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்...!
- 'நான் அவர லவ் பண்றேன், ப்ளீஸ் நீங்க அவர்கிட்ட பேசாதீங்க...' '4 வாட்டி அபார்ஷன் பண்ணிருக்கேன், இப்போ ஏழு மாசம்...' காதலிகளை ஏமாற்ற நினைத்த காதலன் கைது...!
- 'Happy Married Life தாத்தா'... 'அப்பாவுக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம்'... ஆச்சரிய காரணம்!
- 'தாயின் நட்பால் நிகழ்ந்த விபரீதம்'... '4 வயது மகனுக்கு நடந்த கொடூரம்'... 'அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்'!