பாரம்பரிய விழாவில் கரூர் மேயர் கும்மி அடித்து ஆடிய நடனம்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கரூரில் நடைபெற்ற பாரம்பரிய நடன விழாவில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் கலந்துகொண்டு கும்மி நடனம் ஆடினார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

கும்மி ஆட்டம்

கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளி கும்மி ஆட்டம் ஆகியவை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பாரம்பரிய நடனம் ஆடினர். இந்த விழாவை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துவங்கி வைத்து, பெண்களுடன் இணைந்து ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளி கும்மி ஆட்டம் ஆடி அசத்தினார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

பாரம்பரிய நடனம்

கொங்கு மக்களின் பாரம்பரிய பண்பாட்டு அடையாளமான ஈசன் வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டம் ஆகிய நடனங்களுக்கான அரங்கேற்றம் இந்த மண்டபத்தில் நடைபெற்றது. உள்நாட்டு கொங்கு ஈசன் வள்ளி கும்மி குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.பழனிவேல் இந்த நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

கொங்கு மக்களின் ஒற்றுமையை பலப்படுத்தவும் இளைய தலைமுறையை சேர்ந்த மக்களிடம் இந்த கலையை கொண்டு சேர்க்கும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான சிறுமியர் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு தங்களது பாரம்பரிய நடனமான ஈசன் வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கொங்கு மக்கள் வணங்கும் கடவுள்களின் பெயர்களுடன் துவங்கும் பல்வேறு பாடல்கள் இசைக்கப்பட்ட, அதற்கு ஏற்ற தாளத்துடன் பெண்களும் சிறுமியரும் நடனம் ஆடியது பலரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

மேயர்

கரூர் மாவட்டம், மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டு முதன்முறையாக மாநகராட்சி அந்தஸ்துடன் நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. மொத்தம் உள்ள 48 வார்டுகளில் 42 திமுக வேட்பாளர்கள், 2 அதிமுக வேட்பாளர்கள், 1 காங்கிரஸ், 1 சி.பி.எம், 2 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்னர்.  கரூர் மாநராட்சிக்கு நடைபெற்ற மேயர் தேர்தலில் கவிதா கணேசனும் துணை மேயர் பதவிக்கு தாரணி சரவணனும் வெற்றி பெற்றனர்.

கரூரில் நடைபெற்ற பாரம்பரிய நடன திருவிழாவில் மாநகராட்சி மேயர் கலந்துகொண்டு நடனம் ஆடிய வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

 

GUMMI, KAVITHAGANESAN, MAYOR, KARUR, கும்மி, ஒயிலாட்டம், கரூர், கவிதாகணேசன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்