‘இனிமே இப்டி பண்ணாத’... ‘நண்பனின் தங்கைக்காக’... தட்டிக் கேட்கப் போன... இளைஞருக்கு நிகழ்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கரூா் அருகே, ஒருதலைக் காதல் தகராறில், கல்லூரி மாணவா் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூா் தாந்தோணிமலை வ.உ.சி தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் என்பவரின் மகன் மணிகண்டன்(19). இவா் கரூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தாா். தாந்தோணிமலை ஜீவா நகரைச் சோ்ந்தவர் தினேஷ் (19). இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில், தினேஷின் தங்கையை அதேப் பகுதியைச் சோ்ந்த காளிதாஸ் (19) என்பவா் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதலை தினேஷின் தங்கை ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அவரை வழிமறித்து காளிதாஸ் தன்னை காதலிக்க வற்புறுத்தியுள்ளார்.

மேலும் காதலிக்கவில்லை என்றால் ஆசிட் ஊத்தி விடுவேன் என்று காளிதாஸ் மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன அவர், தனது அண்ணனிடம் கூறி அழுதுள்ளார். இதில் கோபமடைந்த தினேஷ், தன் நண்பர் மணிகண்டனிடம் கூறியுள்ளார். அதன்பின்னர் இருவரும், சில நண்பர்களை அழைத்துக்கொண்டு, தொந்தரவு செய்து வந்த காளிதாஸை தட்டிக் கேட்க கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்றுள்ளனர். அங்கு சில நண்பர்களுடன் இருந்த காளிதாஸிடம், நண்பரின் தங்கையுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டு இனிமேல் இப்படி பண்ண வேண்டாம் என்று மணிகண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதில் கோபமான காளிதாஸ், கத்தியை காட்டி ஒழுங்கா போயிருங்க என்று மிரட்டியுள்ளார். ஆனால் மணிகண்டன் தொடர்ந்து எச்சரிக்கவே, கடுப்பான காளிதாஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து, மணிகண்டன், தினேஷ் மற்றும் அவர்களது நண்பர்களை தாக்கியுள்ளனர். அப்போது எல்லோரும் தெறித்து ஓட மணிகண்டன் மட்டும் மாட்டிக்கொள்ள, அவரை கத்தியால் குத்திவிட்டு காளிதாஸ் கும்பல் தப்பித்து ஓடியுள்ளனர். சிறிதுநேரம் கழித்து வந்த நண்பர்கள், ரத்தவெள்ளத்தில் மணிகண்டன் கிடப்பதைப் பார்த்து, அதிர்ந்துபோயினர். 

பின்னர் உடனடியாக மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனை அளித்த தகவலின் பேரில், வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவந்த போலீசார், இந்த வழக்கு தொடர்பாக 6 பேரை கைதுசெய்துள்ளனர். மணிகண்டனை கொலை செய்தபோது, காளிதாஸ் உள்பட அனைவரும் கஞ்சா மற்றும் போதையில் இருந்தது தெரியவந்துள்ளது.

KILLED, GANJA, KARUR, STUDENT, YOUTH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்