‘வாட்ஸ் அப்பில் வந்த வாய்ஸ் மெசேஜ்’!.. ‘ஷாக் ஆன கணவன்’!.. கல்யாணம் ஆன 20 நாளில் மனைவி எடுத்த முடிவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரியில் திருமணமான சில நாட்களில் மனைவி தனது காதலனுடன் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளச்சந்தை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (26). இவருக்கும் மேல கருப்புக்கோடு பகுதியை சேர்ந்த ராஜஸ்ரீ (23) பெண்ணுக்கும் கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேல்முருகன் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது மனைவி வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து தேட ஆரம்பித்துள்ளார். அந்த சமயம் அவரது செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்துள்ளது.
அதில் அவரது மனைவி, ‘உன்னை எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு விரும்பிய வாழ்வை நான் தேடி போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்’ என பேசியிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் வேல்முருகன் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ராஜஸ்ரீ தனது வீட்டின் அருகில் உள்ள சந்தோஷ் என்ற இளைஞருடன் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. திருமணத்திற்கு முன்பே இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது ஒரே மகன் இப்படி செய்துவிட்டானே என்ற விரக்தியில் சந்தோஷின் தந்தை ஜெகதீசன் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஜெகதீசனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் சந்தோஷ் மற்றும் ராஜஸ்ரீ எங்கு இருக்கிறார்கள் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சிறுமி கொலையில் 'புதிய' டுவிஸ்ட்... திருமணத்திற்கு வற்புறுத்தினார்... 'கொலை' செய்தேன்... ஆட்டோ டிரைவர் கைது!
- '13 வீடு, கோடி கணக்குல சொத்து'...'3-வது மகன் செய்த கொடுமை'...சென்னையில் நடந்த பரிதாபம்!
- ‘வேண்டாம்னு சொன்னேன்’!.. ‘கேட்கல’!.. சென்னையில் திருமணமான 4 மாதத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்..!
- 'எங்கடா இங்க இருந்த கோயில காணோம்?'.. குழம்பிய பக்தர்கள்.. 'சிசிடிவி காட்சிகளில்' காத்திருந்த அதிர்ச்சி!
- 'கையில் இருந்த கத்தி'...'நடுரோட்டில் காவலருக்கு நேர்ந்த கொடூரம்'...பகீர் கிளப்பும் வீடியோ!
- ‘சிக்னல்’ இல்லையென வெளியே சென்ற ‘கர்ப்பிணி’ பெண்... ‘சடலமாக’ கிடைத்த பயங்கரம்... ‘உறைய’ வைக்கும் சம்பவம்...
- ‘தூங்காமல்’ அடம்பிடித்த ‘8 வயது’ சிறுவனுக்கு நடந்த கொடூரம்... நண்பருடன் சேர்ந்து ‘தந்தை’ செய்த அதிர்ச்சி காரியம்...
- 'ஸ்கூல்' படிக்கும் போது காதல்'...'திடீரென நடந்த சந்திப்பு'...'பள்ளி காதலிக்காக' கணவன் செய்த கொடூரம்!
- ‘வாக்கிங் சென்ற அரசியல் பிரமுகருக்கு நடந்த பயங்கரம்’!.. மதுரையில் பரபரப்பு..!
- 'சென்னை'யில எத்தனை பேருன்னு தெரிஞ்சுருச்சு'...'எப்போ வேணாலும் கைது'... கூடுதல் டி.ஜி.பி அதிரடி!