அதிமுக திமுக-வை வாஷ் அவுட் செய்த பாஜக! கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த அசத்தல் சம்பவம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரி: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வளர்ந்து வரும் கட்சியாக மாற்றம் பெற்றுள்ளது.

Advertising
>
Advertising


கடந்த ஜனவரி 31ம் தேதி அதிமுகவுடன் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் பாஜக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பாஜகவினர் தேர்தல் பரப்புரையை தொடங்கினர். அண்ணாமலை வீதிவீதியாக சென்று பரப்புரை செய்தாலும், மக்களுக்கு டீ போட்டு கொடுப்பது, உணவகத்தில் சமைப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19ம் தேதியன்று தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் முன்னணி நிலவரங்கள் வெளியே வந்துள்ளன. இந்த முறை 8 முனை போட்டி நடைபெற்றது.  முன்னணி நிலவரங்களின்படி பாஜக 3 பேரூராட்சிகளில் முன்னிலை வகிக்கிறது. 489 பேரூராட்சிகளில் 3ல் மட்டுமே பாஜக முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகின.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட பாஜக திண்டுக்கல் மாநகராட்சியில் தனது வெற்றிக்கணக்கை பாஜக பதிவு செய்தது. 1வது வார்ட்டில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடினர்.  திமுக 123 பேரூராட்சிகளில், அதிமுக 17 பேரூராட்சிகளில் முன்னிலை வைக்கிறது. பேரூராட்சி தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியே பாஜக இருக்கிறது. இருப்பினும் முன்னிலை நிலவரங்களுக்கு இடையிலான இடைவெளி மிக அதிகம் உள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் இரணியில் பேரூராட்சியை பாஜக கைப்பற்றி வெற்றி வாகை சூடியுள்ளது. மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் இருவரும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஒருவரும் வென்றிருக்கின்றனர். திமுக, அதிமுக கட்சிகள் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. நோட்டா வோடு பாஜகவை ஒப்பிட்டு பார்த்து கொண்டு இருக்கும் வேலையில் 4 பேர் சட்டசபைக்கு சென்றது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழகத்தில் பாஜக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது அக்கட்சியினரை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

சென்னையில் சில வார்டுகளில் அதிமுகவை பாஜக ஓவர் டேக் செய்துள்ளது. அதிமுக சென்னையில் எதிர்பார்த்ததை விட மோசமான பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் மாபெரும் வெற்றியை நோக்கி திமுக சென்று கொண்டு இருக்கிறது

URBAN LOCAL BODY ELECTION, BJP, TAMILNADU, ANNAMALAI, KANYAKUMARI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்