‘பேரதிர்ச்சி’ கொடுத்த ‘மாப்பிள்ளை’... ‘கதறும்’ சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்... ‘திருமணத்திற்கு’ ஒரு வாரம் முன் நேர்ந்த ‘துயரம்’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மார்த்தாண்டம் அருகே அடுத்த வாரம் திருமணம் நடக்க இருந்த நிலையில் மாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காரவிளையைச் சேர்ந்தவர் வினீஷ் (33). இவருக்கு வரும் 20ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், வினீஷ் வீடு ஒன்றையும் கட்டிவந்துள்ளார். போதுமான பணம் இல்லாததால் வீடு கட்டும் பணி பாதியிலேயே தடைபட, வினீஷ் வங்கிக் கடனுக்கு முயற்சித்துள்ளார். அதுவும் பலனளிக்காமல் போக, அவர் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தாயுடன் சேர்ந்து உணவு அருந்திய வினீஷ் தன்னுடைய அறைக்குத் தூங்கச் சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை வினீஷை எழுப்பச் சென்ற அவருடைய தாய் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோய் கதறியழுதுள்ளார். அவருடைய அழுகை சத்தம் கேட்டு உடனடியாக அக்கம்பக்கத்தினரும் அங்கு ஓடிவந்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு  சென்ற அவர்கள் வினீஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

CRIME, SUICIDEATTEMPT, MONEY, MARRIAGE, KANYAKUMARI, GROOM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்