விரட்டி சென்ற பெண் போலீஸ்.. அப்படியே காருக்குள் வைத்து கடத்த முயன்ற டிரைவர்.. புதுச்சேரியில் தமிழக இளைஞர் செய்த பகீர் சேட்டை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுச்சேரியில் சாலை விபத்து ஒன்றை நிகழ்த்திவிட்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்த போது  வழிமறித்த பெண் போலீசையும் கடத்த முயற்சி செய்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். போலீஸ் அதிகாரியையே கடத்த இளைஞர் பிளான் போட்ட சம்பவம் அப்பகுதியையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

போச்சுடா...இலங்கை T20 தொடரில் இருந்து அதிரடி பேட்ஸ்மேன் நீக்கம்..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பெண் போலீஸ்

பெண் ஊர்க்காவல் படைவீரரான ஜீவிதா (வயது 32) புதுச்சேரி கிருமாம்பாக்கம்  போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 19 ம் தேதி காலை கடலூர் சாலை தவளக்குப்பம் சிக்னலில் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, வேகமாக வந்த கார் ஒன்று விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றிருக்கிறது.

கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த அந்தக் காரை பிடிக்கும் முயற்சியில் இறங்கினார் ஜீவிதா. அங்கு இருந்தவர்களின் உதவியுடன் விபத்து ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற காரை மடக்கிப் பிடித்திருக்கிறார் துணிச்சல் மிக்க காவல்துறை அதிகாரியான ஜீவிதா.

ஸ்டேஷனுக்கு போ

காரை ஓட்டிவந்த ஷாஜி என்பவரிடம் விபத்து குறித்து கேள்வி எழுப்பிய ஜீவிதா, காரை காவல் நிலையத்திற்கு திரும்புமாறு கூறி, அவரது காரில் ஏறியிருக்கிறார். இந்நிலையில் காரை திரும்பியிருக்கிறார் ஹாஜி. இருப்பினும், கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையம் அருகே வந்த பிறகும் கடலூர் செல்லும் வழியில் காரை வேகமாக ஒட்டியிருக்கிறார் ஹாஜி.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவிதா, காரின் ஸ்டியரிங்கை பிடித்து திருப்ப, கார் சாலையில் ஓரமாக சறுக்கி நின்றது. இதனால், ஆத்திரமடைந்த ஹாஜி, ஜீவிதாவை தாக்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவரது வாக்கி டாக்கியையும் தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஹாஜி தப்பி சென்றுள்ளார்.

விசாரணை

ஹாஜி தாக்கியதால் காயமடைந்த ஜீவிதாவை அந்தப் பகுதி மக்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். இந்த சம்பவம் பற்றி தவளகுப்பம் காவல் நிலையத்தில் ஜீவிதா புகார் அளித்திருக்கிறார். இதனை அடுத்து, சம்பவம் நடைபெற்ற இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் சோதனை செய்தனர்.

கைது

போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஹாஜி ஓட்டிவந்த வாடகை காரின் எண் கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கன்னியாகுமரியை சேர்ந்த ஹாஜி கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் வழியில் அவர் விபத்து ஏற்படுத்தியதும் தெரியவந்திருக்கிறது. இதனை தொடர்ந்து போலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விபத்தையும் ஏற்படுத்திவிட்டு, விசாரிக்க சென்ற காவல்துறை அதிகாரியையும் இளைஞர் கடத்த முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

என் பொண்ண விட்ருங்க மாப்ள.. குறுக்க பாய்ந்த மாமியார்.. அம்மா, பொண்ணு 2 பேரையும்.. கோவத்தில் நடந்த கொடூரம்..!

KANYAKUMARI, MAN, ARREST, பெண் போலீஸ், புதுச்சேரி, இளைஞர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்