'அண்ணா, உங்கள நம்பி தானே நாங்க ஆபீஸ் வரோம்'... 'கழிவறையில் பெண் ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி'... சிக்கிய சாப்ட்வேர் நிறுவன அதிபர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்றைய காலகட்டங்களில், பல இடங்களில் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனைக் கண்காணிக்க வீடுகள், நிறுவனங்கள், சாலைகள் என பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தவறில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டுபிடிக்கவும் உதவி செய்கிறது. ஆனால், அந்த சிசிடிவி கேமராக்களைக் கொண்டு மிகவும் மோசமான செயல் ஒன்றில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கியுள்ளார் மென்பொருள் நிறுவன அதிபர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த  பள்ளிவிளை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சு. 29 வயதான இவர், பட்டப்படிப்பை முடித்துள்ள நிலையில், சொந்தமாக தொழில் ஒன்றை தொடங்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி, சில வாரங்களுக்கு முன் செட்டிக்குளம் பகுதியில் மென்பொருள் நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

இதனையடுத்து, அந்த மென்பொருள் நிறுவனத்தில் மூன்று பெண்களையும் சஞ்சு வேலைக்கு வைத்துள்ளார். இந்நிலையில், அந்த பெண்கள் மூவரும் போலீஸ் நிலையத்தில் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளனர். முன்னதாக, நிறுவனத்தில் யாருமில்லாத நேரம் பார்த்து, பெண்கள் கழிவறையில் சிசிடிவி கேமராவை சஞ்சு பொறுத்தியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், சஞ்சுவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு சஞ்சு திமிராக பெண்களிடம் பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இனி போலீசாரிடம் புகாரளிப்பதே தீர்வாகும் என முடிவு செய்த பெண்கள், கோட்டார் காவல் நிலையத்தில் சஞ்சு மீது புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சஞ்சுவிடம் இருந்து லேப்டாப், சிசிடிவி மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சஞ்சுவையும் கைது செய்தனர்.

சஞ்சுவை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்