திரும்பிப் பார்க்க வைத்த ‘கன்னியாகுமரி’ இடைத்தேர்தல் நிலவரம்.. மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் ‘விஜய் வசந்த்’ முன்னிலை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை வகித்து வருகிறார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 138 இடங்களிலும், அதிமுக கூட்டணி 95 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கன்னியகுமரி தொகுதி மக்களவை உறுப்பினரான காங்கிரஸ் கட்சியின் வசந்தக்குமார், கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தார். அதனால் சட்டமன்ற தேர்தலுடன், கன்னியகுமாரி மக்களவை இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. அதில் காங்கிரஸ் சார்பில், மறைந்த வசந்தக்குமாரின் மகன் விஜய் வசந்த் காங்கிரஸ் கட்சி சார்பிலும், கடந்த முறை வசந்தக்குமாரிடம் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த முறையும் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் இன்று கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி விஜய் வசந்த் 1,66,706 வாக்குகள் பெற்று முன்னிலையில் வகித்து வருகிறார். பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் 1,07,893 வாக்குகள் பெற்று பின்னடவை சந்துள்ளார். இதன்மூலம் 58,813 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்த் முன்னிலையில் இருக்கிறார். இதில் விஜய் வசந்த் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்