'காதலனுக்கு ஊர்ல கல்யாணம்...' 'போன் பண்ணினா ரெஸ்பான்ஸ் இல்ல...' 'நொறுங்கி போன காதலி...' 'நேரா காதலனோட ஊருக்கு வந்து...' - திருப்பத்துக்கு மேல் திருப்பம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தன் காதலனுக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி, காதலனையே கரம்பிடித்துள்ளார் பெங்களூருவை சேர்ந்த இளம்பெண் ஒருவர்.

பெங்களூரு பிரகாஷ் நகரை சேர்ந்தவர் 25 வயதான கவிதா. இவர் என்ஜினீயரிங்  படிப்பை பாதியில் விட்டு பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கன்னியாகுமரி வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த 29 வயதான தினேஷ் என்பவரும் அதே ஜவுளி நிறுவனத்தின் பாண்டிச்சேரியில் இருந்து பெங்களூருக்கு பணிமாற்றம் அடைந்துள்ளார். இந்நிலையில் தான் கவிதாவிற்கும், பிரகாஷிற்கும் காதல் மலர்ந்துள்ளது. அதன்பின் இவர்களது காதல் கதை இருவரது பெற்றோருக்கும் தெரிய வரவே கடும்  எதிர்ப்பு எழுந்துள்ளது.

தற்போது எப்போதும் போல் ஊருக்கு சென்று வரலாம் என நினைத்து கன்னியாகுமரி சென்ற தினேஷை, அவரது உறவுக்கார  பெண்ணுடன் வரும் 26-ம் தேதி திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் தன் காதலன் தினேஷை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு கவிதா மட்டும் பெங்களூரிலிருந்து  தனியாக புறப்பட்டு தினேசை பார்க்க கன்னியாகுமரி வந்துள்ளார்.

கன்னியாகுமரி வந்தும் தினேஷீற்கு போன்  செய்தும் அவர் போன் அழைப்பை ஏற்கவில்லை. எனவே அதிரடியாக களத்தில் இறங்கிய கவிதா குளச்சல் மகளிர் போலீசில் புகார்  செய்துள்ளார். மேலும் கவிதாவின் பெற்றோர்க்கு காவல்துறையினர் தகவல் அளித்ததில்  பெற்றோர் அவரை அழைத்து  செல்ல விருப்பம் இல்லை என  தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தினேஷின் பெற்றோர் குளச்சல் மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர். காவல்துறையினர் தினேஷ் அவர்களிடம்  நடத்திய  விசாரணையில் ஊருக்கு வந்த நான் உறவுக்கார பெண்ணை திருமணம் செய்யும்  சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன் என கூறியுள்ளார்.

விசாரணை முடிந்த பின் குளச்சல் காவல்துறையினர் தினேஷின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஊர்  கோயிலில் வைத்து தினேஷ்  - கவிதா திருமணத்தை நடத்தியுள்ளனர். அதன்பின் மணமகனின் பெற்றோர் கவிதாவை தங்கள் வீட்டு மருமகளாக வெள்ளிச்சந்தைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்