‘ஆத்திரத்தில்’ கொலை செய்துவிட்டு... 108 ஆம்புலன்ஸுக்கு ‘போன்’ செய்து ‘சிக்கிய’ மனைவி... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குடும்பத் தகராறில் கணவரைக் கொலை செய்துவிட்டு ஆம்புலன்ஸுக்கு போன் செய்த மனைவி போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கரியமாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (55). அவருடைய மனைவி கிருஷ்ணவேணி. மரத்தச்சு வேலை செய்துவந்த ஐயப்பன் வேலை முடிந்து மாலை வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்த கிருஷ்ணவேணி தவறி விழுந்ததில் தன் கணவருக்கு தலையில் அடிபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, ஐயப்பன் தலையில் ரத்த காயம் ஏற்பட்ட நிலையில் இறந்து கிடந்ததால் உடனடியாக அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்து  விசாரணை நடத்திய போலீசாரிடம் கிருஷ்ணவேணி, “என் கணவர் முதல் நாள் வீட்டுக்கு வந்தபோது நான் பார்க்கவில்லை. காலையில் பார்த்தபோது தலையில் அடிப்பட்ட நிலையில் கிடந்தார்” என அழுது நடித்துள்ளார்.

கிருஷ்ணவேணியின் செய்கையால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்ததில் கணவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், “எங்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் காதலித்து வீட்டை விட்டுப்போய் திருமணம் செய்துகொண்டாள். அப்போதிலிருந்து என் கணவர் தினமும் குடித்துவிட்டு வந்த என்னிடம் தகராறு செய்துவந்தார்.

வழக்கம்போல அவர் நேற்றும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்தார். அப்போது வலி தாங்க முடியாமல் ஆத்திரத்தில் அவரை விறகு கட்டையால் 3 முறை தலையில் அடித்தேன். அடித்ததும் அவர் தரையில் விழ போதையில் விழுந்து கிடக்கிறார் என நினைத்து நான் தூங்கிவிட்டேன். ஆனால் அவர் காலையிலும் எழுந்திருக்காமல் கிடந்ததால் 108க்கு போன் செய்து அவர் கீழே விழுந்துவிட்டதாக தெரிவித்தேன். அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் மாட்டிக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

CRIME, MURDER, KANYAKUMARI, HUSBAND, WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்