தேவாலயங்கள் தான் குறி.. பகலில் நோட்டம், இரவில் கொள்ளை.. கொத்தாக தூக்கிய போலீஸ்.. திடுக்கிடும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி மாவட்டம், புதூர் என்னும் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் புதிதாக கட்டப்பட்ட தேவயாலயம் ஒன்றில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை அடிக்கபட்டுள்ளது. இதே போல கடந்த பிப்ரவரி மாதம் குளச்சல் அருகே உள்ள காணிக்கை அன்னை தேவாலயத்திலும் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
Also Read | இறந்த தந்தை சொன்னதை கேட்டு லாட்டரி வாங்கிய மகன்??.. மிரண்டு போக வைத்த தகவல்!!.. நடந்தது என்ன?
இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த குளச்சல் போலீசார், விசாரணையில் இறங்கி இருந்தனர். கன்னியாகுமாரி மாவட்டத்தின் வேறு சில தேவாலயங்களிலும் இது போல கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தேவாலயங்களில் கொள்ளையில் ஈடுபடும் நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸ் தீவிரமாக தேடியும் வந்துள்ளனர்.
அப்போது தேவாலயங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது பெண் ஒருவரும், ஹெல்மெட் அணிந்த ஆண் ஒருவரும் தேவாலயத்திற்குள் சென்று உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. மேலும் சுற்று வட்டார பகுதியில் உள்ள தேவாலயங்களிலும் சிசிடிவியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது பகல் நேரத்தில் பைக்கில் ஹெல்மெட் அணிந்த ஆண் ஒருவருடன் பெண் ஒருவரும் ஜோடியாக வந்து தேவாலயங்களை நோட்டமிட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கேமராவில் பதிவான பைக்கின் பதிவு எண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்தபோது அது கருங்கல் பகுதியை சேர்ந்த ஷாபுமோன் என்பவரின் பெயரில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, ஷாபுமோனை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது குளச்சல் அருகே பெண் ஒருவருடன் சென்று கொண்டிருந்த போது போலீசார் அவரை மடக்கி பிடித்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்போது அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
எம்பிஏ வரை படித்துள்ள ஷாபுமோனுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. வேலை எதுவும் கிடைக்காததால் தேவாலயங்களை நோட்டமிட்டு கொள்ளை சம்பவங்களிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். அவருடன் நூர்ஜஹான் என்ற பெண்ணும் உடன் சென்றுள்ளார். பகலில் தேவாலயங்களை நோட்டமிட்டு இரவில் பணம் மற்றும் நகைகளை அவர்கள் திருடி வந்துள்ளனர். இந்த பணத்தில் தனது மனைவிக்கு பெரிய பங்களா வீடு ஒன்றை கட்டி கொடுத்துள்ள ஷாபுமோன், சில கோழி பண்ணைகளை அமைத்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதே போல, நூர்ஜஹானுக்கும் பண்ணை வீடு ஒன்றை அவர் கட்டி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மொத்தம் 17 தேவாலயங்களில், 30 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்துள்ள ஷாபும் மற்றும் நூர்ஜஹான் ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.
Also Read | "இனி உடலை எரிக்கவோ, புதைக்கவோ வேண்டாம்".. உரமாக மாறும் மனித உடல்கள்.. ஒப்புதல் அளித்த நகரம்!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- புருஷன் ஊருக்கு போய்ட்டாரு.. ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த மனைவி.. கொஞ்ச நாள்ல நடந்த பயங்கரம்..!
- திருடிய பணத்தில் புது பைக்.. வாட்சப் ஸ்டேட்டசால் வசமாக சிக்கிய கும்பல்.. சினிமாவை மிஞ்சிய ஸ்கெட்ச்..!
- மகனுக்கு சொகுசு வீடு இருந்தும் குப்பை மேட்டில் வசித்து வரும் 80 வயது மூதாட்டி..? மனதை நொறுங்க வைத்த சோகம்..
- மனைவிக்காக நடுராத்திரி பூஜை.. கணவர் செஞ்ச பகீர் காரியம்.. சுற்றி வளைத்த போலீஸ்..!
- பெத்த மகனுக்கே ஸ்கெட்ச்.. கரும்பு தோட்டத்தில் இருந்த 6 பேர்.. அப்பா செஞ்ச குலை நடுங்கும் காரியம்..!
- 23 வயசுல செஞ்ச கொலை.. 73 வயதில் கைதான நபர்.. 50 வருஷத்துக்கு அப்புறம் ஆதார் கார்டால் சிக்கிய தாத்தா.. திடுக் பின்னணி..!
- தனியாக வாழ்ந்துவந்த பெண் சடலமாக மீட்பு.. ஆரம்பத்துல இருந்தே போலீசுக்கு உறுத்தலாக இருந்த விஷயம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
- "வேலை தேடும் இளைஞர்கள் தான் டார்கெட்".. வெளிநாட்டுல இருந்து வந்த போன்கால்.. போலீசின் திடீர் ரெய்டில் சிக்கிய கும்பல்..!
- கல்யாணமான 5 மாசத்துல மணப்பெண்ணுக்கு நடந்த துயரம்.. போலீசுக்கு உறுத்தலா இருந்த ஒரு விஷயம்.. கடைசியில வெளியான அதிர்ச்சி தகவல்..!
- ஷ்ரத்தா வழக்கை போலவே நடந்த பயங்கரம்.. இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் செஞ்ச பகீர் காரியம்..!