"உச்ச நீதிமன்ற நீதிபதியின் செல்போனை ஒட்டுக்கேட்பதா"?.. பெகாசஸ் விவகாரத்தில்... காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் காட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு சிரிப்பு யோகா சங்கம் மற்றும் அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் ரயில்வே தொழிலாளர் நல சங்கம் சார்பில் கொரோனா காலத்தில் அரும்பணியாற்றிய ரயில்வே தூய்மைப் பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா நாகர்கோவில் கோட்டார் பகுதியில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், ரயில்வே நிலைய மேலாளர் முத்துவேல் டிப்போ அதிகாரி ஸ்ரீ ராம் குமார், சிரிப்பு யோகா சிறப்பு பிரதிநிதி கண்ணன் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த விஜய் வசந்த், "குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் இருந்து கனிமவளங்கள் வெட்டி எடுத்து கடத்துவதை தடை செய்ய வேண்டும். மக்களை பாதிக்காத வகையில் உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா தலமான கன்னியாகுமரி அருகே உள்ள சாமிதோப்பு பகுதியில் விமான நிலையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் போராட்டம், வேளாண் சட்டம், பெகாசஸ் விவகாரம், மீனவர் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் மத்திய அரசு விவாதம் செய்யவில்லை. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி செல்போனை ஒட்டுகேட்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. இது குறித்து விவாதிக்க மறுக்கிறார்கள். இது தொடர்பாக தகவல் தர மறுப்பதன் மூலம் அவர்கள் பக்கம் தவறு இருப்பதை ஒத்துக்கொள்கிறார்கள்" எனக் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "வேண்டும்... வேண்டும்... நீதி வேண்டும்!".. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த 'தமிழ்' மொழி!.. ஸ்வாரஸ்ய சம்பவம்!!
- '10 பிரதமர்கள்... 3 அதிபர்களின்... செல்போன்கள் ஒட்டுக்கேட்பு'!?.. பூதாகரமானது 'பெகாசஸ்' விவகாரம்!.. மெல்ல அவிழும் மர்ம முடிச்சுகள்!
- 'பெகாசஸ்' சர்ச்சை!.. ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரையும் வேவு பார்த்தது அம்பலம்!.. தோண்ட தோண்ட வெளிவரும் பகீர் தகவல்கள்!
- 50,000 செல்போன்கள் 'ஹேக்' செய்யப்பட்டு 'தகவல்கள்' திருட்டு...! அந்த 'லிஸ்ட்ல' இந்தியால 'யாரெல்லாம்' இருக்காங்க...? இதெல்லாம் 'யாரோட' வேலை...? வெளியாகியுள்ள அதிர வைக்கும் தகவல்...!
- பிரசாந்த் கிஷோர் 'காங்கிரஸ்' கட்சியில் இணைகிறாரா...? 'ராகுல் காந்தியை சந்தித்த நிலையில்...' - வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்...!
- '2024 டார்கெட்'!.. "பாஜகவுக்கு எதிராக கூட்டணியில்... 'அவங்க' இல்லாம எப்படி"?.. வியூகம் அமைத்து காய் நகர்த்தும் சரத் பவார்!
- 'Bro, இது எப்படி சாத்தியம்'?... 'அசந்து போன நெட்டிசன் கேட்ட கேள்வி'... 'பின்ன யாரோட மகன் அவரு'... நெகிழ வைத்த விஜய் வசந்த்தின் நச் பதில்!
- ‘அடுத்த எலக்சன்ல வின் பண்ணனும்னு நினைச்சா தொகுதி பக்கம் தலைய காட்டுங்க ப்ரோ’!.. கிண்டலடித்த நெட்டிசனுக்கு ‘பக்குவமாக’ பதில் சொன்ன விஜய் வசந்த்..!
- டஃப் எதுவும் கொடுக்கல...! 'ரொம்ப ஈசியா ஜெய்த்த விஜய் வசந்த்...' - அதிகபட்சமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...!
- தமிழக சட்டமன்ற தேர்தல்... அரசியல் கட்சிகளின் உண்மையான பலம் என்ன?.. வாக்கு சதவீத விவரங்கள் உள்ளே!