'டாய்லெட்க்கு கூட எழும்பி போக முடியாது'... 'தம்பிக்காக சொத்தையும் வித்தாச்சு'... '14 வருசமா படுத்த படுக்கை'... நெஞ்சை நொறுக்கும் அண்ணனின் பாச போராட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி அருகே பாறசாலை என்னும் இடத்தில் வசிப்பவர் விபின். இவருக்கு லிஜோ என்ற தம்பி உள்ளார். லிஜோவுக்கு 19 வயது இருக்கும் போது, வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு கழுத்துக்கு கீழ் உடல் பகுதி முழுவதுமாக செயலிழந்துவிட்டது.
B.Tech படிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது, லிஜோ படுத்த படுக்கையாகிவிட்டார். அன்று முதல் வெண்டிலேட்டர் உதவியுடன் மற்றொருவர் கண்காணிப்பில் மட்டுமே வாழ முடியும் என்ற நிலைக்கு லிஜோ தள்ளப்பட்டார்.
தம்பியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று நினைத்த விபின், பணத்தேவைக்காக தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் விற்றதோடு, லிஜோவின் அருகிலேயே 14 ஆண்டுகளாக இரவு பகலாக பாதுகாத்து வருகிறார். இரவில் கூட தம்பி தன்னை அழைக்க, மைக் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி, வீடுமுழுக்க ஸ்பீக்கர்களை அமைத்து கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார், விபின்.
இதுகுறித்து பேசிய லிஜோ, "கடந்த 14 ஆண்டுகளாக என்னுடைய அண்ணன் தான் என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய வாழ்க்கையே எனக்காக அர்ப்பணித்துள்ளார். அவருக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
வேலைக்கு செல்ல முடியாது, செலவு செய்ய சொத்தோ பணமோ கிடையாது, பராமரிக்க தாய் தந்தை இல்லை, இதற்கிடையே லிஜோ-விபினுடன் பிறந்த 2 சகோதரிகளும் குடும்ப சூழ்நிலையால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படி பல போராட்டங்களுக்கு ஆளாகியிருக்கும் விபின், தன்னுடைய 2 குழந்தைகளை படிக்க வைக்க முடியாமலும் தவித்துவருகிறார். விபின்-லிஜோ இடையேயான பாசப் போராட்டம் குறித்து தெரியவந்து, மனித உரிமை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீஜேஷ் என்பவர் உதவ முன்வந்திருக்கிறார்.
இதுகுறித்து பேசும் அவர், மொத்த குடும்பத்தையும் தாங்கி நிற்கும் விபினின் வாழ்க்கையை பார்த்து தான் அதிர்ந்து போய்விட்டதாக கூறியுள்ளார். தம்பிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து நிற்கும் அண்ணன் விபினுக்கு உரிய உதவி கிடைக்கும் பட்சத்தில், 7 உயிர்களுக்கு அது சென்று சேரும்.
பெற்றோரை முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கும் இந்த காலகட்டத்தில், தன்னுடைய தம்பிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த விபின், இன்னும் மனிதநேயம் மரணிக்கவில்லை என்பதற்கு எடுத்துகாட்டு.
மற்ற செய்திகள்
Video: ‘Honda ஆக்டிவா.. மாதம் ஒரு முறை Mutton பிரியாணி.. பட்டு வேட்டி சேலை’ - இது ‘வேறமாரி’ தேர்தல்!
தொடர்புடைய செய்திகள்
- 'நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா'... காதலித்து ஏமாற்றியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி ட்விஸ்ட்!
- “எங்க போனீங்க மார்க்? எனக்கு பசிக்குது!” - அன்பு நண்பர் இறந்ததை அறியாத காட்டு யானை.. தினமும் ஏக்கத்துடன் ரிசார்ட்டுக்கு வந்த நெகிழ்ச்சி சம்பவம்!
- 'சாப்ட்வேர் மூளை'... 'டாய்லெட்டில் இருந்த கேமரா செயல்பட்டது எப்படி'?... நாகர்கோவில் சாஃப்ட்வேர் நிறுவன உரிமையாளர் குறித்த பகீர் தகவல்கள்!
- 'எந்த வரனும் அமையல'... 'அந்த நேரம் பார்த்து மலர்ந்த காதல்'... 'காதலர்களை சூழ்ந்த எதிர்ப்பு'... சாதித்த காதல் ஜோடி!
- #VIDEO: 'வீடியோ ஓடிட்டு இருக்கு, கையில் ட்ரிமரோடு நின்ற தாய்'... 'கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா'... மில்லியன் இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ!
- 'காதலனின் மொபைலை பார்த்து ஷாக்கான காதலி'... 'கிழிந்த காதலனின் முகமூடி'... ஆனா, இப்படி ஒரு பழிவாங்கல், கடல்லேயே இல்லையாம்!
- '81 வயது மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர்'... 'எங்க காதல் தெய்வீகமானது'... ஆனா, இருவரையும் பிரித்த விசித்திர காரணம்!
- 'லவ் அங்க தான் ஸ்டார்ட் ஆச்சு...' ஸோ மேரேஜும் 'அந்த எடத்துல' வச்சு தான் நடத்தணும்...! - பெர்மிசன் கேட்டு காதல் ஜோடி மனு...!
- கொரோனா பாதுகாப்பு உடையில்... காதலை வெளிப்படுத்திய காதலன்!.. 'இப்ப இல்லனா... எப்பவும் இல்ல'... லவ் ஓகே ஆச்சா இல்லயா?.. தரமான சம்பவம்!
- பக்காவா பிளான் பண்ணி 'propose' செய்த 'காதலன்'!!... ஆச்சரியத்துடன் 'ஓகே' சொன்ன 'காதலி'... மறுகணமே இருவருக்கும் காத்திருந்த 'அதிர்ச்சி'!!...