'கல்லூரி வரலாற்றிலேயே முதல் முறை'... சாதித்த 'சென்னை திருநங்கை'... வாழ்த்திய பிரபலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற, திருநங்கை நளினா பிரசிதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. திமுக எம்பி கனிமொழியும் தனது வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருநங்கை ஒருவர் கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வென்றிருப்பது, கல்லூரி வரலாற்றிலேயே இது முதல் முறையாகும். சென்னை லயோலா கல்லூரியில் முதுகலை இரண்டாமாண்டு பயின்று வருபவர் திருநங்கை மாணவி நளினா பிரசிதா. இவர் கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு துணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது திருநங்கைகளுக்கு பெரும் உந்துதலாக இருக்கும் என பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.
தனது வெற்றி குறித்து பேசிய அவர் '' இது மிகவும் வித்தியாசமான ஒரு அனுபவம். நான் சக மாணவர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறேன் என்பதையே இந்த வெற்றி காட்டுகிறது'' என தெரிவித்தார். இந்நிலையில் மாணவி நளினா பிரசிதாவிற்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. திமுக எம்பி கனிமொழி தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் பகிர்ந்துள்ளார்.
தனது பதிவில் ''சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை சகோதரி நளினா பிரசிதா அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. நளினா அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பதவியேற்பில் கெத்து காட்டிய 'கனிமொழி'... 'ஏன் அவங்க அப்படி கத்துனாங்க'? .... வைரலாகும் வீடியோ!
- 'உடல்நலக் குறைவால் உயிரிழந்த எம்.எல்.ஏ'.. சிகிச்சைப் பலனின்றி நடந்த சோகம்!
- 'ஆமா திமுக குடும்பக் கட்சிதான்.. எங்களோட அடுத்த முக்கியமான பொறுப்பு..'.. உதய்நிதி!
- 'அதுக்கு சான்ஸ் இருக்கா?'.. ‘வெய்ட் அண்ட் சீ’..ஸ்டாலின் சொன்ன பஞ்ச் பதில்!
- ‘தலைவராக முதல் மக்களவைத் தேர்தல்’.. 39 ஆண்டுகால பொள்ளாச்சி வரலாற்றை மாற்றிய அமைத்த மு.க.ஸ்டாலின்!
- “தலை வணக்கம் தமிழகமே”.. பிரமாண்ட வெற்றிக்கு நன்றி தெரிவித்த திமுக தலைவர்!
- 'அப்போ அவுங்க'... 'இப்போ இவரு'... 'தேசிய அளவில் இடம்பிடித்த தி.மு.க.'!
- 'தென்கோடியில் மீண்டும் அரியணை ஏறும் 'காங்கிரஸ்' ...முன்னணியில் 'வசந்த குமார்'!
- என்ன ஆச்சு? குஷ்புவைத் தொடர்ந்து துரைமுருகனும் மருத்துவமனையில் அனுமதி!
- ‘தமிழகத்தில் வெற்றிவாகைசூடிய வேட்பாளர்கள்’!.. ‘ தொகுதிவாரியான முழு விவரம்’!