'கனிமொழி ஒரு பார்லிமெண்ட் டைகர்.. இப்போது தூத்துக்குடிக்கு டைகராக..' : மு.க.ஸ்டாலின்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, காங்கிரஸூடனான கூட்டணியில் வேட்பாளர் விபரங்களையும், தொகுதிப் பங்கீட்டு விபரங்களையும் அறிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

அவ்வகையில் தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் சார்பாக மக்களவை வேட்பாளராக போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து பேசிய மு.க.ஸ்டாலின் கனிமொழி ஒரு சமூக போராளியாக வளர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  மேலும் கனிமொழி பற்றி திமுக தொண்டர்கள் மற்றும் தூத்துக்குடி பொதுமக்களின் முன்னிலையில் உற்சாகமாக பேசி வாக்கு சேகரித்தார் மு.க.ஸ்டாலின்.

கடந்த 2007-ஆம் வருடம் எம்பியாக பணியாற்றத் தொடங்கிய கனிமொழி மரண தண்டனை விலக்கு, நீட் தேர்வு விவகாரம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சனைகள், மீனவர் நலன், இந்திய பல்கலைக்கழகங்களில் தலித் மாணவர்களின் மீதான ஒடுக்குமுறை, கல்வி உரிமை மசோதா, பாலியல் கொடுமைகள், சமூக நீதி, பொருளாதார இட ஒதுக்கீடு உள்ளிட்டவை பற்றி பாராளுமன்றத்தில் பேசியவர் என்றும் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள அதிமுக-பாஜக கூட்டணிக்கு பதில் கொடுக்கும் விதமாக கனிமொழியை வெற்றியடைய வைக்குமாறு கோரிய மு.க.ஸ்டாலின், கனிமொழி ஒரு பார்லிமெண்ட் டைகர் என்றும் தற்போது தூத்துக்குடிக்கு இன்னுமொரு டைகராக கிடைத்திருக்கிறார் என்றும் புகழாரம் சூட்டினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்