மதுபோதையில் குளிக்க சென்ற வாலிபருக்கு நேர்ந்த சோகம்.. காஞ்சிபுரம் தெப்பக்குளத்தில் நடந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுபோதையில் நண்பர்களுடன் தெப்பக்குளத்தில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுபோதையில் குளிக்க சென்ற வாலிபருக்கு நேர்ந்த சோகம்.. காஞ்சிபுரம் தெப்பக்குளத்தில் நடந்த அதிர்ச்சி..!
Advertising
Advertising

காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மது அருந்திவிட்டு தனது நண்பர்கள் மூவருடன் காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் உள்ள சங்கர மடத்தின் மகாப்பெரியவர் மணிமண்டம் கோயில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் குளித்துள்ளனர். அப்போது மதுப்போதையில் இருந்த தினேஷ் தெப்பக்குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த மணிமண்டபத்தின் நிர்வாகிகள் உடனே போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தெப்பக்குளத்தில் இருந்து தினேஷின் சடலத்தை மீட்டனர். மேலும் போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்