‘பாம்புக்கு பாலாபிஷேகம்’!.. ‘10 கலர்ல முகத்தை காட்டுவேன்’!.. பகீர் கிளப்பும் காஞ்சிபுரம் பெண் சாமியார் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கழுத்தில் பாம்பை சுற்றி அருள்வாக்கு வழங்கிய காஞ்சிபுரம் பெண் சாமியார் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் கபிலா என்ற பெண் வெள்ளரி அம்மன் கோயிலில் அருள்வாக்கு சொல்லி வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு கழுத்தில் நல்லபாம்பை சுற்றுக்கொண்டு நடனமாடுவது போன்ற வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டு வனத்துறையினரிடம் சிக்கினார்.

இந்நிலையில் பெண் சாமியார் கபிலா குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தென்னக்கீற்றால் குடிசை போட்டு, அங்கு சிறிய அம்மன் சிலை வைத்து குறி சொல்லத் தொடங்கியுள்ளார். தான் சொல்லும் வாக்கு அம்மன் வாக்காகவே இருக்க வேண்டும் என்பதற்காக, நெற்றி நிறைய குங்குமம், எலுமிச்சை மாலை மற்றும் கையில் சூலாயுதம் ஆகிவற்றுடன்தான் அருள் வாக்கு சொல்லி வந்துள்ளார்.

மேலும் பத்து, இருபது கோழிகளை வரவழைத்து கோழிகளின் கழுத்தை கடித்து துப்புவது, பத்து வகையான வண்ணங்களில் முகத்தை காட்டுவேன் என சீரியல் பல்புகளை முகத்தில் அடிக்கவிட்டு அடிக்கடி பரபரப்பை கிளப்பி வந்துள்ளார். இதை உள்ளூர் கேபிள் டிவிக்களில் ஒளிப்பரப்பி விளம்பரப்படுத்தியுள்ளார். இதனால் கோயிலுக்கு கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அப்போது குடிசை மெல்ல மெல்ல கோபுரமாக உயர்ந்துள்ளது.

இதனிடையே நல்லபாம்புகளை வரவழைத்து பாலாபிஷேகம், பூஜைகள் என கழுத்தில் பாம்பை சுற்றி, அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை சமீபத்தில் யூடியூப்பில் பதிவேற்றியுள்ளார். இது வைரலானதை அடுத்து வனத்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில், இதை எல்லாம் நானாக செய்யவில்லை. அம்மன் வந்து என் கனவில் சொன்னதால்தான் செய்தேன்’ என கூறியதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

CRIME, KANCHIPURAM, WOMAN, PRIEST, ARRESTED, SNAKE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்