நாய் குரைத்த சத்தத்தால் ஏற்பட்ட பிரச்சனை.. டாட்டூ கலைஞருக்கு நேர்ந்த சோகம்.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாய் குரைத்தது தொடர்பாக எழுந்த பிரச்சனையில் இளைஞருக்கு நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | அடிக்கடி அம்மா வீட்டுக்கு போன ‘காதல்’ மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செஞ்ச காரியம்.. அடுத்தடுத்து வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபால் பூபதி தெருவை சேர்ந்தவர்கள் அறிவழகன்-அமுதா தம்பதியினர். இவர்களுக்கு சவுமியா என்ற மகளும்,  சரண் சிங் என்ற மகனும் உள்ளனர். சரண்சிங் அப்பகுதியில் டாட்டூ கடையும், மாலையில் மண்டி தெரு பகுதியில் உணவகம் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் சரண்சிங் வீட்டுக்கு முன்னால் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். சரண்சிங் குடும்பத்தினர் இரவு ஓட்டல் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பி தூங்க செல்லும் நிலையில், நாய் குரைக்கும் சத்தத்தால் உறக்கம் கெடுவதாக விஷ்ணுவிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால் கடந்த மூன்று நாட்களுக்கு இரு குடும்பத்தினரிடையே சண்டை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் நேற்றிரவு விஷ்ணு, தனது தாய் சித்ரா, தம்பி சிவா ஆகியோருடன் சரண்சிங் குடும்பத்தினருடன் சண்டையிட்டுள்ளார். இதையறிந்து உணவகத்தில் இருந்து வேகமாக சரண் சிங் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது கூர்மையான ஆயுதங்களால் சரண் சிங்கை விஷ்ணு தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண் சிங் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விஷ்ணு, அவரது தாய் சித்ரா, தம்பி சிவா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய் குரைத்தது தொடர்பாக எழுந்த பிரச்சனையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ‘ஜிம்மில் வொர்க் அவுட்’.. திடீரென சுருண்டு விழுந்து இறந்த இளைஞர்.. மதுரையில் நடந்த ‘ஷாக்’..!

KANCHIPURAM, TATTOO DESIGNER, DOG BARKING ISSUE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்