நடுரோட்டில் ஆட்டோவுக்கு ஸ்கெட்ச்!.. கத்திமுனையில் 300 சவரன் தங்க நகை கொள்ளை!.. விசாரணையில் வேர்த்து விறுவிறுத்துப் போன 'காவல்துறை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆட்டோவை வழிமறித்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான 300 சவரன் தங்க நகைகள் கத்திமுனையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 காவலர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூரில் நகை கடை நடத்தி வரும் மகேந்திரன், கடந்த 11 ஆம் தேதி விற்பனைக்காக நகைகளை ஆட்டோவில் கொண்டு சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் மிரட்டி கொள்ளையடித்தனர்.

இது தொடர்பான புகாரில் சி.சி.டி.வி கேமிரா உதவியோடு போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மானாமதி காவல்நிலையத்தில் பணியாற்றும் தமிழ் மற்றும் திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்தில் பணியாற்றும் கதிர் என்ற இரண்டாம் நிலை காவலர்கள் 2 பேர் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 45 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.

வேலியே பயிரை மேய்ந்தது போல அமைந்திருக்கும் இந்த சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்