'என்ன காப்பாத்துங்க ப்ளீஸ்'... 'கடைசி வரை போராடிய மாணவன்'... சொன்னது புரியாமல் நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மூச்சு திணறலால் போராடிய மாணவன், இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்தும்,அவர் சொன்னது புரியாததால் மாணவன் இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவன் கணேஷ் குமார். இவர் பச்சையப்பன் மேல்நிலை பள்ளியில உள்ள மைதானத்தில் தனியாக அமர்ந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உதவிக்கு அருகில் யாரும் இல்லாத நிலையில், தனது மொபைலில் இருந்து 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை அழைத்துள்ளார். அப்போது மாணவர் பேசியது அங்கிருந்த ஊழியருக்கு புரியாமல் போயுள்ளது. இதனால் மாணவன் கணேஷ் குமாருக்கு உதவி கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

நடந்த சம்பவம் குறித்து மாணவனின் உறவினர்கள் கூறும்போது, 6 மாதத்திற்கு முன்பும் இதே போன்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது 108 இலவச ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கணேஷ் குமார் மருத்துவமனையில் சேர்க்கப்ட்டுள்ளார். ஆனால் தற்போது மாணவனின் உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளார்கள்.

இதற்கிடையே தமிழக காவல்துறையின் காவலன் செயலியில், உதவி கேட்பவரின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் வசதி இருப்பதை போன்று 108 இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கும் அதுபோன்ற வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

COLLEGESTUDENT, AMBULANCE, KANCHEEPURAM, PACHIYAPPAN GROUND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்