'தேர்தல்' தோல்விக்கு பின்னர்.. 'கமல்ஹாசன்' சொன்ன விஷயம்.. வைரலாகும் 'ட்விட்டர்' பதிவு!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், பெருன்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும், இந்த சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியிருந்தது. இதில், கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டிருந்தார். இதே தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில், பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனும், திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் போட்டியிட்டிருந்தனர்.
கோவை தெற்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே கமல்ஹாசன் அதிகமாக முன்னிலை வகித்துக் கொண்டே இருந்தார். ஆனால், இறுதிச் சுற்றில் வானதி ஸ்ரீனிவாசன் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட நூலிழையில், இந்த வெற்றி வாய்ப்பை கமல்ஹாசன் தவற விட்ட நிலையில், மக்கள் நீதி மைய்ய தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தனது தோல்விக்கு பின்னர், ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார். அதில், 'பெருவெற்றி பெற்றுள்ள @mkstalin அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்' என ஸ்டாலினின் வெற்றிக்கு, தனது வாழ்த்துக்களை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்.." ஸ்டாலினுக்கு 'வாழ்த்து' சொல்லி.. பிரதமர் 'மோடி' போட்ட 'ட்வீட்'!!
- 'உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் கோவை தெற்கு தொகுதி...' 'ரொம்ப க்ளோசா போயிட்ருக்கு...' - தற்போது யாரு முன்னிலை...?
- 'முதல்' தேர்தலிலேயே அபார 'வெற்றி' பெற்ற உதயநிதி ஸ்டாலின்.. மறுகணமே ட்விட்டரில் வெளியிட்ட 'புகைப்படம்'.. வைரலாகும் 'ட்வீட்'!!
- "வாழ்த்துக்கள் 'ஸ்டாலின்'ஜி.. நல்லபடியா 'ஆட்சி' அமைச்சு, 'பட்டை'ய கெளப்புங்க.." 'முதல்வர்' ஆவதற்கு முன்னரே வந்த அசத்தல் 'வாழ்த்து'!!
- 'தமிழக தேர்தல் 2021'... 'வெற்றி கணக்கை ஆரம்பிக்கிறதா மக்கள் நீதி மையம்'... கமல் முன்னிலை!
- ஸ்ருதிஹாசன் மீது தேர்தல் அலுவலரிடம் பரபரப்பு புகார்!.. வலுக்கும் மோதல்... குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி போர்க்கொடி!.. என்ன நடந்தது?
- VIDEO: 'சாந்து பொட்டு... ஒரு சந்தன பொட்டு'... தேர்தல் பிரச்சாரத்தின் போது... 'தேவர் மகன்' சக்தியாக மாறிய கமல்!
- மக்கள் நீதி மய்யம் தலைவர் 'கமல்ஹாசன் போட்டியிடும் 'தொகுதி' அறிவிப்பு...! எந்த கட்சிகளுடன் மோதல்...? - இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு...!
- 'கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம்...' 'உறுதியான கூட்டணி...' - அறிவித்த கட்சியின் தலைவர்...!
- ‘தயாராகிவிடுங்கள்’!.. முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திய பின் ‘கமல்ஹாசன்’ அதிரடி டுவீட்..!