"புத்தரை சாமியாக கும்பிடுவதை அவர் பார்த்தால் வருத்தப்படுவார்.!" - கமல்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உலக நாயகன் என இந்தியாவை தாண்டியும் அதிகம் அறியப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சினி துறையில் இயங்கி வரும் கமல்ஹாசன், நடிப்பு, இயக்கம், கதை ஆசிரியர், நடன கலைஞர், பாடகர் என பல துறைகளிலும் சிறந்த நபராகவும் விளங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்திருந்த 'விக்ரம்' திரைப்படம் வெளியாகி பிளாக்பாஸ்டர் ஹிட்டாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளது பற்றி அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதே போல, கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக, KH234 என குறிப்பிடப்பட்டுள்ள கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

'நாயகன்' திரைப்படத்திற்கு பிறகு, சுமார் 35 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார். இதற்கு மத்தியில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டு வந்தார் கமல்ஹாசன். இந்த நிலையில், கமல்ஹாசனின் பிறந்தநாளான இன்று (நவம்பர் 7) அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தனது பிறந்தநாளான இன்று, குடும்பத்தினர் மற்றும் சினிமா பிரபலங்கள் பலருடன் நேரத்தை செலவழித்திருந்தார் கமல்ஹாசன். அதே போல, ரசிகர்கள் நடத்திய மருத்துவ முகாமிலும் அவர் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, தனது 68 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கட்சி தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றினார் நடிகர் கமல்ஹாசன்.

இந்த உரையில் புத்தர் குறித்து பேசி இருந்த கமல்ஹாசன், "எல்லாவற்றையும் துறந்த புத்தன் எனக்கு ஹீரோ. ராஜா என்பதற்காக இல்லை. மக்களைப் பற்றி அவர் நினைத்தார். எங்கே வறுமை இருக்கிறதோ, அதை நோக்கி நகர்ந்தார். ரொம்ப கடுமையான வாழ்க்கை தான். ஆனால் அதை தேர்ந்தார். அப்படிப்பட்ட ஒரு தேர்வாக இருக்க வேண்டும். நாம் இன்றைக்கு அவரையே சாமியாராக வைத்து கும்பிடுவதை அவர் பார்த்தார் என்றால் ரொம்ப வருத்தப்படுவார்.

இறை மறுப்பு என்பதை கூட அவர் முக்கியமாக நினைக்கவில்லை. மனிதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் அவருடைய மதம். மனிதம் தான் அவருடைய மதம். அதில் "னி" எடுத்து விட்டால் மதம் ஆகிவிடும். அதை எடுத்து விடாதீர்கள்.

நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும். அதற்கு ஜாதி கிடையாது, மதம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் கட்சியே கிடையாது. பாஸ்போர்ட் கிடையாது. வேடந்தாங்கல் பறவை போல இருக்க வேண்டும். நம்மால் பார்டரை தாண்டி செல்ல முடியாது. மனதாவது அப்படி பறந்து திரிய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

KAMALHAASAN, BUDDHAR, MNM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்