கமல்ஹாசன் 'அந்த' தொகுதியில் தான் போட்டியிடுறாரா...? 'அங்க மநீம-க்கு அதிக செல்வாக்கு...' - தனியார் நிறுவனம் கருத்துக்கணிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கழகங்களோடு கூட்டணி இல்லை என அறிவித்த மக்கள் நீதி மையம் கட்சிக்கு சென்னையில் ஓரளவு செல்வாக்கு இருப்பதாக தனியார் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நிகழும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்களின் தேர்தல் உத்திகளையும், பிரச்சார பாதைகளையும் தொடங்கிவிட்ட நிலையில், புதிதாக களத்தில் இறங்கிய மக்கள் நீதி மையம் கட்சியும் அதன் பணிகளை சிறப்பாக தொடங்கிவிட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன் மக்கள் நீதி மன்ற தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் கழகங்களோடு கூட்டணி இல்லை என சமீபத்தில் அறிவித்த நிலையில் அவரின் திட்டம் காங்கிரஸ், விசிக, பாமக, அமமுக உள்பட ஒரு சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனியார் நிறுவனம் நடத்திய பொது கருத்துக்கணிப்பில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு இருப்பதாகவும், சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் குறிப்பாக மயிலாப்பூரில் கமல்ஹாசன் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் மயிலாப்பூர் தொகுதியில் சிறப்பு பிரச்சாரம் செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சியினர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்