‘கருப்பு சட்டையில் கமல்’!... ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் ஆச்சர்யம்..! தமிழக அரசியலில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் ‘மக்கள் நீதி மய்யம்’! - என்ன திட்டம் ஆழ்வார்பேட்டை ஆண்டவரிடம்...?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்கும் விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருப்பு உடை அணிந்துக் கலந்துகொண்டார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (07.05.2021) ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருடன் 34 அமைச்சர்கள் பதிவியேற்றுள்ளனர். பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதில், அதிமுக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று உள்ளார். கருணாநிதி முதல்வராக பதவியேற்க காலகட்டங்களில் ஜெயலலிதாவும், அதேபோல ஜெயலலிதா பதவியேற்றபோது, கருணாநிதியும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றது கிடையாது.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றபோது, மு.க.ஸ்டாலின் அந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றார். தற்போது மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும் விழாவில், அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் அந்தஸ்தில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார்.

மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார். அப்போது கருப்பு உடை அணிந்து அவர் விழாவுக்கு வந்தது கவனித்தக்க அம்சமாக அமைந்தது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்