"ஒண்ணா இருந்தாலும், எதிரும் புதிருமா இருந்தாலும் இது நமக்கு பொருந்தும்".. அரசியல் மொழியில் விக்ரமனிடம் பேசிய கமல்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

Advertising
>
Advertising

பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. இதனிடையே, கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சியும் வெளியேறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த டாஸ்க், ஏலியன்ஸ் மற்றும் பழங்குடி இன மக்கள் டாஸ்க்கிற்கு அப்படியே நேர் எதிராக அமைந்திருந்தது. சினிமா பிரபலங்கள் பலரின் கதாபாத்திரமாக போட்டியாளர்கள் மாறி நடிக்க வேண்டும் என்பது தான் இந்த வார டாஸ்க்காக இருந்தது. அப்படி இருக்கையில், போட்டியாளர்களுக்கு காசும் பிக்பாஸ் கொடுத்திருந்தது. எந்த போட்டியாளர் நன்றாக நடனம் ஆடி நடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் அது.

முந்தைய வாரங்களை போல சண்டை அதிகம் இல்லாமல், சற்று கலகலப்பாக தான் இந்த வார டாஸ்க்கும் சென்றிருந்தது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஐகானிக் கேரக்டர்களின் வேடமிட்டு நடித்திருந்தனர். இது தான் பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் டாஸ்க்காக இருந்தது.

இதில் மைக்கேல் ஜாக்சன், சிவாஜியின் நேசமணி, வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம், எம். ஆர். ராதா, சரோஜாதேவி, விக்ரமின் அந்நியன் கெட் அப், வடிவேலுவின் நாய் சேகர் என பல ஐகானிக் கதாபாத்திரங்களை சற்றே பெயர் மாற்றி பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் வலம் வந்திருந்தனர். மேலும், தாங்கள் ஏற்ற கதாபாத்திரம் போல, அவர்கள் நடை, உடை, பாவனை உள்ளிட்ட விஷயங்களை சிலர் செய்திருந்ததும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, வார இறுதியில் வந்த கமல்ஹாசன், போட்டியாளர்களின் கடந்த வார செயல்பாடு குறித்து பல கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இதற்கு மத்தியில், இந்த வாரம் இரண்டு எலிமினேஷன்களும் இருந்ததையடுத்து ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். சுமார் 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருப்பதால், போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ள இனிவரும் நாட்கள் முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.

இதனிடையே, கமல்ஹாசன் மற்றும் விக்ரமன் ஆகியோரிடையே நடந்த உரையாடல் பெரிய அளவில் மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் அதிகம் நியாயம் பேசும் நபராக போட்டியாளர்கள் விக்ரமனை பார்த்து வருகின்றனர். எந்த விஷயம் செய்தாலும் குறை கண்டுபிடிக்கும் நபராகவும் விக்ரமன் இருப்பதாக எல்லா போட்டியாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.

அப்படி ஒரு சூழலில் இது குறித்து விக்ரமனிடம் பேசிய கமல்ஹாசன், "எல்லாரும் சொல்ற குற்றச்சாட்டு என்னன்னா, எல்லா விஷயத்திலயும் நீதி பேசுறேங்குறதுல குறைகள் கண்டுபிடிக்குறார்னு சொல்றாங்க. அது போக பாராட்டுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கு. நானே உங்கள தப்பு நடக்கும் போது தப்புன்னு சொல்லி இருக்கேன், பாராட்டுறதையும் நானே ரசிக்கிறேன்.


நான் உங்களுக்கு இப்ப சொல்றது புத்திமதி இல்லை. புரிந்து கொள்ள உங்களுக்கு இது ஒரு வாய்ப்பு. அதனால் தான் உங்களிடம் டைம் எடுத்து சொல்றேன். உங்களுக்கு வேலை இருக்கு வெளியே. அரசியல்வாதி தன்னை ஒவ்வொரு நாளுக்கும் அதற்காக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இது எனக்கும் பொருந்தும், உங்களுக்கும் பொருந்தும். ஒன்றாக இருந்தாலும் எதிரும் புதிருமாக இருந்தாலும் இது பொருந்தும். நன்றி" என கமல்ஹாசன் தெரிவித்தார்.

KAMALHAASAN, VIKRAMAN, BIGG BOSS TAMIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்