"தமிழ் நமது உயிரிலே ஓட வேண்டும்" - ‘தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சிக்கு கமல் வாழ்த்து!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான, ‘தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சி திரும்பவும் ஒளிபரப்பாகவுள்ளது. பிரபல முன்னணி தமிழ்த் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியின் தமிழ் மொழி போட்டி நிகழ்ச்சியான இந்நிகழ்ச்சியின் நோக்கம் தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களை அடையாளம் காண்பதே. கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 'தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சி விஜய் டிவி-யில் ஒளிபரப்பானது.

Advertising
>
Advertising

இந்நிலையில் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள இந்நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முன்னதாக இந்நிகழ்ச்சியினை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின், “உயிர் திரையில் தமிழ்ச் சுடரை ஏற்றி வைப்போம். எந்நாளும் தமிழோடு நாம் ஒளிர்வோம். தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு என்று சொல்வோம். தமிழ் பேசி தமிழ் பேசி பெருமை கொள்வோம். தமிழ் போல் மொழி இல்லை. தமிழின்றி நாம் இல்லை. தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு.” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தற்போது தமது வாழ்த்தில், “குருதி போல் தமிழ் நமது உயிரிலே ஓட வேண்டும். உறுதியான தமிழ் உணர்வு உள்ளத்தில் துடிக்க வேண்டும். தமிழ் என்ற புள்ளியில் நாம் ஒன்றாக இணைய வேண்டும். தமிழ் எடுத்து தமிழ் தொடுத்து தமிழோடு கலக்க வேண்டும்.

தமிழ் போல் மொழி இல்லை. தமிழின்றி நாம் இல்லை. தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு” என்று பேசியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ இப்போது வைரலாகி வருகிறது.

THAMIZH PECHU ENGAL MOOCHU, KAMAL HASSAN, VIJAY TELEVISION, STAR VIJAY, VIJAY TV

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்