எரிச்சலில் டி.வி.யை உடைத்த கமல்.. காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

'நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்' என தான் எரிச்சலடைந்து, டி.வி.யை உடைத்தக் காரணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 5 தினங்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளின் தேர்தல் பரப்புரை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், சமூக ஊடகங்கள் மூலம் தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்து வரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மக்களுக்கு வாக்குப் பதிவு சம்பந்தமான சிலக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

வீடியோவில் கமல்ஹாசன் டி.வி. பார்க்கிறார். அப்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் பா.ஜ.க. தலைவர் ஹெச். ராஜா ஆகியோர் பேசுவது போன்ற குரல்கள் கேட்கிறது. உடனே கமல் டி.வி. ரிமோட்டை தூக்கி எறிந்து டி.வி.யை உடைக்கிறார்.

பின்னர், 'மொத்த அரசாங்கமும் சேர்ந்து நீட் தேர்வு என்ற பெயரில், ஒரு பொண்ண கொலை செய்தார்களே, அந்த பொண்ணோட அப்பா, அம்மாகிட்ட கேளுங்க. யாருக்கு ஓட்டு போடக்கூடாதுனு சொல்வாங்க'. இப்படி அவர் மக்களிடம் எழுப்பும் கேள்விகளை, இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

KAMALHAASAN, LOKSABHAELECTIONS2019, MNM, CAMPAIGN, TV, REVEAL, TORCHLIGHT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்