"மோடி ஜெயிப்பதற்காகவா நான் அரசியலுக்கு வந்தேன்".. "யார் பி டீம்".. கொந்தளித்த கமல்ஹாசன்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

"கமல்ஹாசனுக்கு ஓட்டு போடாதீங்க", மோடி ஜெயித்து விடுவார்கள் என குழந்தைத்தனமாக கூறுவதாக கமல்ஹாசன் குற்றச்சாட்டு வைத்தார்.

Advertising
>
Advertising

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைவதால் தேர்தல் பிரசார களம் சூடுபிடித்துள்ளது. கோவை மாநகராட்சியில் போட்டியிடும் 100 வேட்பாளர்களை ஆதரித்து, கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் மதுரையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வரவேற்றனர். இதனையடுத்து கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், மநீம கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில போட்டியிடும் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்த கொண்டார். இதன் பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுக அதிமுக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.

"கமல்ஹாசனுக்கு ஓட்டு போடாதீங்க"

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "திமுக ஆட்சியேற்று 9 மாத காலத்தில் இதுவரை மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தேர்தல் வந்தால் இரண்டு கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு தேர்தல் முடிந்தவுடன் குப்பை போல் வீசி விடுகிறார்கள்.  மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்  எங்கெல்லாம் வெற்றி பெறுவார்களோ,  அங்கெல்லாம் நேர்மை கோட்டைக்கான அஸ்திவாரம். என்னை பார்த்து அடிக்கடி கமல்ஹாசனுக்கு ஓட்டு போடாதீங்க, மோடி ஜெயித்து விடுவார்கள் என அசட்டுதனமானவும், குழந்தைத்தனமாகவும் கூறுகிறார்கள். மோடி ஜெயிப்பதற்காகவா? நான் இங்கு வேலைக்கு வந்தேன்? மோடி வென்றாலும் தோற்றாலும் எனக்கு கவலையில்லை. தமிழகம் ஜெயிக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை.

மோடி எப்படி கவுன்சிலராக வருவார்?

மோடி ஜெயிக்க பல யுக்திகளை வைத்துள்ளார். அந்த யுக்திகள் பழிக்கக் கூடாது என்பது தான் எனது ஆசை. என்னை பி டீம், பி டீம் என்றார்கள். அது எடுபடாததால் இப்படி வீடு, வீடாக சொல்கிறார்கள். மோடி எப்படி கவுன்சிலராக வருவார்? மக்கள் சார்பு நிலையை எடுக்க கூடாது எனவும் மய்யமாக இருக்க வேண்டும். இது மக்களுக்கு சொல்லும் அறிவுரை அல்ல,  தனக்கும் தனது கட்சியினருக்குமான அறிவுரையாக பார்க்கிறேன். நீட்டை ஒழிப்பேன் என்றவர்கள் நீட்டிற்கு வகுப்பு நடத்துவேன் என பிரச்சாரம் செய்கிறார்கள். நியாயமான தேர்தல் இதுவரை நடைபெற்றுள்ளது என நினைக்கிறீர்களா?

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு மேயராவது தனது நோக்கமல்ல. நான் தலைவராக மட்டுமே இருப்பேன். ஹிஜாப் அணிவதற்கும், திருநீறு வைப்பதற்கும், கடவுள் இல்லை என்று சொல்வதற்கும் இந்த நாட்டில் உரிமையுண்டு. எனது நாத்திகம் கிண்டல் அடிக்கப்படக்கூடாது. ஆத்திகமும் கிண்டல் அடிக்கப்படக்கூடாது" என்று தெரிவித்தார்.

KAMAL HAASAN, MNM, PRESS MEET, COIMBATORE, ELECTION CAMPAIGN, MODI, URBAN LOCAL ELECTION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்