சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு நடத்த தயார்.. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வைரல் பேச்சு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கமல்ஹாசன் நடிகராக மட்டுமல்லாது 'மக்கள் நீதி மய்யம்' என்ற தேர்தல் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | நைட்டியில் வந்த திருடர்.. வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால்.. ஆத்திரத்தில் செஞ்ச அதிர்ச்சி காரியம்!!

மேலும் சினிமா சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளிலும் கமல்ஹாசன் அவ்வப்போது பங்கெடுத்தும் வருகிறார்.

கலாச்சாரம், காந்தியம், சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட களங்களில் நடக்கும் மாநாடு கருத்தரங்குகளில் அவ்வப்போது கமல்ஹாசன் கலந்து கொண்டு வருகிறார்.

மகாத்மா காந்தியாரின் மிகத்தீவிர பின்பற்றாளரான உலகநாயகன் கமல்ஹாசன், கதர் ஆடைகளை அணிந்து கதர் ஆடை குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தி வருபவர்.

சமீபத்தில் ராகுல் காந்தியுடன் சேர்ந்து பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டார். யாத்திரையில் கலந்து கொண்ட பின்னர் கமல்ஹாசன் சென்னை திரும்பினார். இந்த யாத்திரையில் கமலுடன் சேர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் சிலரும் கலந்து கொண்டனர். அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஆழ்வார் பேட்டை மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய கமல்ஹாசன், "டெல்லியில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் என்னோடு கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது எனது விருப்பம். இதற்கு அனுமதி கோரியுள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன். ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியை நினைவுகூரும் விதமாக மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும்." என கமல் பேசியுள்ளார்.

Also Read | "தமிழ்நாடு வாழ்க".. மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமல்ஹாசன் 5 மொழிகளில் ட்வீட்! TRENDING

KAMAL HAASAN, KAMAL HAASAN SPEECH, JALLIKATU, MARINA BEACH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்