"ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. வென்று காட்டுவோம் EVKS".. திமுக தலைவர் CM மு.க. ஸ்டாலினை டேக் செய்து கமல்ஹாசன் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சூடுபிடிக்க துவங்கி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் EVKS இளங்கோவன் .. கமலின் மக்கள் நீதி மய்யம் ஆதரவு.!

கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக  ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா 46 வயதில் உயிரிழந்தார்.

இவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் ஆவார். கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு அதிமுக (தமாகா) வேட்பாளர் யுவராஜாவை வென்றார்.

திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாக பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட உள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன், 2004 ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். 1985 ஆம் ஆண்டு சத்யமங்கலம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 2019 பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் இளங்கோவனை நிபந்தனையின்றி ஆதரிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், "நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான திரு. ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்குத் தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், "ஒன்று கூடுவோம் ஸ்டாலின். வென்று காட்டுவோம் ஈவிகேஎஸ் இளங்கோவன். தமிழ்நாடு வாழ்க" என கமல் பதிவிட்டுள்ளார்.

Also Read | "யாருக்கும் ஆதரவில்லை.. போட்டியிட போவதுமில்லை".. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து சரத்குமார் அறிக்கை!

KAMAL HAASAN, MK STALIN, ERODE EAST BYPOLL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்