'திமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக...' உதயநிதியோடு சந்திப்பு நடந்ததாக சொல்லப்படுவது உண்மையா...? - கமல்ஹாசன் விளக்கம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திமுகவோடு கூட்டணி தொடர்பாக உதயநிதி மற்றும் கமல்ஹாசன் சந்திப்பு தொடர்பாக வெளியான செய்திக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி அவர்கள் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் சட்டபேரவைத் தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாக தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மநீம தலைவர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவியது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கமல்ஹாசன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பின் போது, திமுகவோடு கூட்டணி தொடர்பாக உதயநிதியை சந்தித்ததாக வெளியான தகவல் வெறும் யூகம்தான், யாரையும் போய் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை' என காட்டமாக தெரிவித்துள்ளார்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்