‘என்னது அதுக்குள்ள சாப்பிட்டு முடிச்சாச்சா’!.. தம்பி இது அசுர வேகம்.. பிரியாணி போட்டியில் பின்னி எடுத்த இளைஞர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரியாணி சாப்பிடும் போட்டியில் இளைஞர் ஒருவர் தங்க நாணயம் பரிசு வென்று அசத்தியுள்ளார்.

‘என்னது அதுக்குள்ள சாப்பிட்டு முடிச்சாச்சா’!.. தம்பி இது அசுர வேகம்.. பிரியாணி போட்டியில் பின்னி எடுத்த இளைஞர்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் ஈட்டிங் சேலஞ்ச் பாய்ஸ் மற்றும் ஜேசிஐ சின்னசேலம் ஆகிய இரு அமைப்புகள் பிரியாணி உண்ணும் போட்டியை நடத்தின. அதில் 10 நிமிடத்தில் ஒரு கிலோ பிரியாணியை சாப்பிட்டு முடிக்கும் போட்டியாளர்களுக்கு தங்க நாணயம் பரிசு என அறிவித்தனர். மேலும் முதலில் வரும் 30 பேர் மட்டுமே போட்டியில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தனர். அதில் குறைந்த நேரத்தில் சாப்பிட்டு முடிக்கும் முதல் 3 நபர்களுக்கு பரிசு வழங்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

Kallakurichi youth win gold coin in Biryani contest

போட்டி குறித்த அறிவிப்பு வெளியானதும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலங்காத்தான் கிராமத்தை சேர்ந்த 21 வயது ராமகிருஷ்ணன் என்ற இளைஞர் நான்கரை நிமிடத்தில் ஒரு கிலோ பிரியாணியை சாப்பிட்டு தங்க நாணயத்தை தட்டிச் சென்றார். இரண்டாவது பரிசாக 10 கிராம் வெள்ளி நாணயமும், மூன்றாம் பரிசாக 5 கிராம் வெள்ளி நாணயமும் அடுத்தடுத்து வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்