கள்ளக்குறிச்சி: "மாணவியின் உடலை நாளை வாங்கிக்கொள்கிறோம்"..கோர்ட்டில் சம்மதம் தெரிவித்த பெற்றோர்.. முழுவிபரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை நாளை பெற்றுக்கொள்வதாக அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | திடீர்னு பிங்க் கலர்ல மாறிய வானம்.. ஏலியன்களோட வேலைன்னு தெறிச்சு ஓடிய பொதுமக்கள்..லாஸ்ட்ல உண்மையை ஒத்துக்கொண்ட கம்பெனி..!

அதிர்ச்சி

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கி பயின்றுவந்த அந்த மாணவி ஜூலை 13 ஆம் தேதி மரணமடைந்ததாக பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, கடந்த ஆண்டுகளில் பல மாணவிகள் இதேபோல மரணமடைந்திருப்பதாகவும் இதற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் மாணவியின் உறவினர்கள் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து பள்ளியை நிரந்தமாக மூடக்கோரி போராட்டத்தில் குதித்தனர் மக்கள். இதில், பெரும் சேதங்கள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து ஏராளமான போலீசார் கள்ளக்குறிச்சியில் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மனுத்தாக்கல்

இந்நிலையில், மாணவியின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும், தங்களது தரப்பு மருத்துவரை உடற்கூராய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் மாணவியின் தந்தை. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மறு உடற்கூறாய்வுக்கு உத்தரவிட்டனர். இருப்பினும் மாணவி தரப்பு மருத்துவரை நியமிக்க மறுத்துவிட்டனர் நீதிபதிகள். இந்நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் மாணவியின் தந்தை. அங்கேயும் மறு உடற்கூறாய்வுக்கு மட்டுமே நீதிபதிகள் ஒப்புதல் அளித்தனர்.

இதனிடையே நேற்றுமுன்தினம் மாணவியின் உடல் மறுஉடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதனையடுத்து மாணவியின் உடலை பெற்றோர் வாங்கிக்கொள்ள வராததால் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளும்படி பெற்றோரின் வீட்டில் காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்.

சம்மதம்

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவியின் உடலை பெறுவது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது," மருத்துவ குழுவை அமைக்க நீங்களோ நானோ நிபுணத்துவம் பெற்றவர்கள் அல்ல" என நீதிபதி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து நாளை காலை மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள் பெற்றோர். மேலும், நாளையே மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யவேண்டும் எனவும் நீதிபதி வலியுறுத்தியுள்ளார். இதனால் நாளை மாணவியின் உடல் அடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | Take Off ஆன 15 நிமிஷத்துல விமானிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு.. இறுதி நேரத்திலும் அவர் எடுத்த முடிவு.. கவலையில் மூழ்கிய விமான நிலையம்..!

KALLAKURICHI, SRIMATHI DEATH NEWS, SRIMATHI DEATH CASE, STUDENT DEATH, KALLAKURICHI ISSUE, கள்ளக்குறிச்சி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்