'நடு ராத்திரி மயானத்தில் கேட்ட அலறல் சத்தம்'... 'எரிந்த நிலையில் கிடந்த 'ஸ்மார்ட் போன்'... அதிரவைக்கும் மர்மம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ள்ளக்குறிச்சியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் சில மர்மங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள மேட்டுநன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவரது மூத்த மகள் நித்ய ஸ்ரீ நர்ஸிங் படித்து வந்தார். இந்த சூழ்நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் ஒரே ஸ்மார்ட் ஃபோன் மட்டும் இருப்பதாக கூறப்படும் நிலையில் மாணவிக்கும், அவரது இரு சகோதரிகளுக்கும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில் ஏற்பட்ட பிரச்சனையே தற்கொலைக்குக் காரணம் என மாணவியின் உறவினர்கள் தெரிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து கிராமத்தில் உள்ள மயானத்தில் மாணவியின் உடல் எரியூட்டப்பட்டது.
இதற்கிடையே மாணவி எரியூட்டப்பட்ட இடத்தில் தற்போது கூடுதல் மனித எலும்புகள், கைக்கடிகாரம், செல்போன் உதிரி பாகங்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு கிடந்த எலும்புகளை தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இது ஒரு புறம் இருக்க, மேட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது மகன் ராமுவை காணவில்லை என அண்மையில் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
காணாமல் போன இளைஞர், தற்கொலை செய்துகொண்ட மாணவி நித்யஸ்ரீயை ஒருதலையாகக் காதலித்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள போலீசார், ''தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடல் எரியூட்டப்பட்ட நாளன்று இரவில் இடுகாட்டு பகுதியில் ராமு சுற்றி வந்துள்ளார். பின்னர் காரியம் முடிந்து அனைவரும் சென்ற நிலையில், நள்ளிரவில் இளைஞர் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதாக அந்த பகுதி மக்கள் போலீசாரிடம் கூறியுள்ளார்கள்.
ஒரு தலையாக மாணவி நித்ய ஸ்ரீயை ராமு காதலித்து வந்தாலும் அவரின் இறப்பை ஏற்க முடியாமல் மாணவி உடல் எரிந்துகொண்டிருக்கும் போதே அதில் பாய்ந்து இளைஞர் ராமு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேநேரத்தில் மாணவியின் வீட்டில் நான்கு ஸ்மார்ட்ஃபோன்கள் இருக்கிறது. அப்படி இருக்கச் சகோதரிகள் ஸ்மார்ட்ஃபோனை தரவில்லை என்ற காரணத்திற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என காரணமும் சந்தேகத்தை வரவழைத்துள்ளது. எனவே முழுமையான விசாரணை முடிந்த பின்னரே இந்த வழக்கில் அனைத்து மர்ம முடிச்சுகளும் அவிழும்'' என போலீசார் கூறியுள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இதனாலதான் ஆரம்பத்துல இருந்தே.. காப்பாத்தாம வீடியோ எடுத்தேன்!'.. கொடைக்கானல் பெண் தீக்குளித்த வழக்கில் வீடியோ எடுத்தவர் கூறிய 'வியக்க வைக்கும்' காரணம்!
- 'அந்த பொண்ணும் மனுஷி தான்'... 'நீ பண்ற வேலைக்கு பெத்தவங்க நாங்க சப்போர்ட் வேற பண்ணனுமா'... இளம் என்ஜினீயர் செஞ்ச கோரம்!
- “பெத்தவங்கனு கூட பாக்காம இப்படி செஞ்சுட்டான்.. கொஞ்சம் என்னனு கேளுங்கய்யா!”.. போலீஸாரை வீட்டுக்கு அழைத்துவந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- 'நலங்கு வச்சு களைகட்ட தொடங்கிய திருமண விழா'... 'ஜோராக வந்த சீர்வரிசை'... ஒரு செகண்டில் துக்க வீடாக மாறிய கல்யாண வீடு!
- 'ஒரு ரூமில் தாய்!'.. 'இன்னொரு ரூமில் மகள்'.. டிக்டாக் மோகத்தால் செய்த துணிகரம்! மனம் நொறுங்கிய குடும்பத்தலைவனின் விபரீத முடிவு!
- 'தம்பி விட்டுரு டா டேய்'... 'கதறிய 51 பேர்'... 'கொடூரத்தை ஃபேஸ்புக்கில் லைவ் செஞ்ச இளைஞர்'... உலகையே அதிரவைத்த சம்பவத்தில் வந்த தீர்ப்பு!
- 'அவர் சரி இல்ல மேடம், என் பொண்ண...' 'போலீஸ் ஸ்டேஷன்ல விசாரணை முடிஞ்ச அடுத்த செகண்டே...' - ஈரக்குலையை நடுங்க செய்யும் கொடூரம்...!
- ‘பணம் அனுப்பியதை நிறுத்திய சகோதரர்கள்!’.. குழந்தைகள், வளர்ப்பு நாய்களுடன் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு.. இடிந்து போன, தாய் செய்த உடனடி காரியம்.. முறையற்ற உறவால் சோகம்!
- 'தங்கச்சி தான் எங்க உசுரு'... 'நடந்து போயிட்டு இருக்கும்போது வந்த அலறல் சத்தம்'... 'காப்பாற்ற ஓடிய 2 அண்ணன்கள்'... குடும்பத்தை புரட்டி போட்ட சோகம்!
- ‘தற்கொலைக்கு அழைத்த கணவர்!’.. மறுத்ததும், அடுத்தடுத்து ‘மனைவி’ கண்ட ‘அதிர்ச்சி’ காட்சி! - சென்னையை ‘உலுக்கிய’ கொடுந்துயரம்!