‘தேக்கு மரம் யாருக்கு சொந்தம்?’.. அண்ணன், தம்பிக்கு இடையே நடந்த சண்டை.. கடைசியில் நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மரம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனையில் சகோதரர்களுக்குள் எழுந்த சண்டையில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | “அவர் எனக்கு அண்ணன் மாதிரி”.. பாசமழையை பொழிந்த குல்தீப்.. யாரை சொல்றார்ன்னு தெரியுதா..?

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த செம்படை கிராமத்தை சேர்ந்தவர்கள் சக்கரவர்த்தி மற்றும் சந்திரசேகர். சகோதரர்களான இருவருக்கும் இடையே அடிக்கடி நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தம்பி சந்திரசேகரன், தனது விவசாய நிலத்தில் இருந்த 6 தேக்கு மரங்களில் 4 மரங்களை வெட்டி பயன்படுத்தியுள்ளார். அதனால் மீதமிருந்த 2 மரங்கள் தனக்குத்தான் சொந்தம் என நினைத்த அண்ணன் சக்கரவர்த்தி, அதை சீர் செய்யும் வேலையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த சந்திரசேகரன், தனது உறவினர்கள் சிலரை அழைத்துக்கொண்டு சக்கரவர்த்தியின் வீட்டிற்கு சென்று அவரை கட்டையால் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சந்திரசேகரன் மற்றும் அவரது சம்பந்தி ஆட்டுக்காரன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தேக்கு மரம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினையில் அண்ணனை தம்பி கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

KALLAKURICHI, MAN, ATTACK, BROTHER, TREE ISSUE, கள்ளக்குறிச்சி, தேக்கு மரம், அண்ணன், தம்பி, சண்டை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்