கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஏற்பட்ட புதிய திருப்பம்.. 2 ஆசிரியர்களை கைது செய்த காவல்துறை.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில், மேலும் 2 ஆசிரியர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | Kallakurichi: இறந்த மாணவியின் தாய் எழுப்பிய கேள்விகளும்.. பள்ளி நிர்வாகத்தின் விளக்கமும்.. முழு விபரம்..!

அதிர்ச்சி

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கி பயின்றுவந்த அந்த மாணவி சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, கடந்த ஆண்டுகளில் பல மாணவிகள் மரணமடைந்திருப்பதாகவும் இதற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் மாணவியின் உறவினர்கள் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, பள்ளியை நிரந்தமாக மூடக்கோரி நேற்று காலை பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் பள்ளி வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனத்தையும் போராட்டக்காரர்கள் மறித்ததால் கள்ளக்குறிச்சியே பரபரப்பாகியது. இதனையடுத்து 400 போலீஸ் அதிகாரிகள் அங்கே குவிக்கப்பட்டனர்.

நடவடிக்கை

இந்நிலையில், மரணமடைந்த மாணவியின் தாயார் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் அந்தப் பள்ளியின் வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா மற்றும் கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், மாணவிக்கு ஆதரவாக வாட்சப் குழுக்கள் துவங்கப்பட்டு, அதன் மூலம் ஏராளமான மக்கள் பள்ளி அமைந்திருக்கும் பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வாட்சப் அட்மினை கண்டறிந்து கைது செய்யவும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கும்படியும் நீதிபதிகள் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில் அந்தப்பள்ளியின் முதல்வர், தாளாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.

மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.

Also Read | Breaking: "நாளை தனியார் பள்ளிகள் விடுமுறைகள் அளித்தால் கடும் நடவடிக்கை".. தனியார் பள்ளிகள் இயக்குனரகம் அதிரடி..!

KALLAKURUCHI, SCHOOLSTUDENT, PRIVATESCHOOL, SRIMATHIDEATHCASE, SRIMATHIDEATHNEWS, கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சிகலவரம், மாணவிமரணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்