கபடி பயில வரும் கல்லூரி மாணவி ஒருவருக்கு, பயிற்சியாளரின் மகன் பாலியல் தொல்லைக் கொடுத்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராஜவீதியைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர், தனியார் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை வணிகவியல் பயின்று வருகிறார். கபடி வீராங்கனையான இவர், சுந்தராப்புரத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரிடம் மாலை நேரங்களில் இலவசமாக கபடி பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் விஸ்வநாதனின் மகன் சஞ்சீவ்குமார், அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசியதோடு, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும், சஞ்சீவ்குமாருக்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருப்பதாகவும் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து பொது இடத்தில் கெட்ட வார்த்தையில் பேசுவது, கொலை மிரட்டல், பெண்ணை பாலியல் தொல்லைப்படுத்தும் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், சஞ்சீவ்குமாரை கைது செய்தனர்.
இந்நிலையில் புகாரை திரும்பப் பெறக் கோரி, புகாரளித்த மாணவியின் வீட்டிற்கு சென்ற சஞ்சீவ்குமாரின் உறவினர்கள் தகராறு செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மாணவி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ‘கோயிலுக்கு போயிட்டு இருந்தேன்’..‘அன்பா பேசுனாங்க’.. ஆட்டோ டிரைவர்களின் வெறிச்செயல்.. 16 வயது சிறுமியின் பதற வைத்த வாக்குமூலம்!
- கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.... சிறுமி கொலை வழக்கில் புதிய திருப்பம்...
- மண்புழுவா.. குமாரசாமியா.. எடியூரப்பாவா..? - வைரலான பள்ளி வினாத்தாள்!
- 'என்ன கொடுமை எல்லாம் நடந்திருக்கு'...அதிரவைக்கும் சிறுமியின்'...'பிரேத பரிசோதனை அறிக்கை'!
- 'அதிர்ச்சியில் உறைய வைக்கும்'...'கோவை சிறுமி'யின் பிரேத பரிசோதனை அறிக்கை'...கொந்தளித்த மக்கள்!
- ‘கை, கால்கள் கட்டப்பட்டு, பரிதாப நிலையில் 5 வயது சிறுமியின் சடலம்’.. பதற வைக்கும் கொடூர சம்பவம்!
- ’17 வருடத்துக்கு பின் பள்ளிக்கு மின்சாரம்.. ‘தேர்தலே காரணம்’.. நன்றி சொல்லும் மக்கள்!
- ‘ஆபத்தான குதிரைப் பந்தயம்’.. ‘9 வயது சிறுவனின் சாகசம்’.. மனம் பதற வைக்கும் வீடியோ!
- ‘10 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை’.. ‘வீடியோவை வெளியிட்ட ஆட்டோ டிரைவர்’.. கண்ணீருடன் மாணவி கதறல்!
- “இனி எங்கள நாங்களே பாதுகாத்துக்றோம்”..‘துப்பாக்கி’வேண்டி ஆட்சியரிடம் மனு கொடுத்த கோவை மாணவிகள்!