‘இனி இவங்களுக்கு இ-பதிவு தேவையில்லை’!.. ‘ஐடி கார்டு காட்டினாலே போதும்’.. காவல்துறை முக்கிய அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இ-பதிவு செய்வதில் இருந்து முன்களப்பணியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அத்தியாவசிய தேவையில்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் மக்கள் அதிகளவில் வெளியே சுற்றுவதால், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காலை 6 மணி முதல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறந்திருந்த நிலையில், அது காலை 10 மணி வரை மட்டுமே என குறைக்கப்பட்டது. மேலும் மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பயணம் செய்வோர் இ-பதிவு கட்டாயம் செய்ய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது. இந்த நடைமுறை நேற்று முன்தினத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னை மக்கள் தங்களது சகர காவல் நிலையத்தை தாண்டி சென்றாலும் இ-பதிவு கட்டாயம் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தேவையின்றி வெளியே வருவோர் மற்றும் இ-பதிவு செய்யாமல் வருவோர் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் முன்களப்பணியாளர்களுக்கு இ-பதிவு கட்டாயம் இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது. அதில் மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், ஊடகத்துறையினர், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு இ-பதிவு அவசியமில்லை. இவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்தால் போதும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்