‘ஃபோன் பண்ணியதும்’... ‘இருமலுடன் தொடங்கும்’... ‘கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் ட்யூன்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் இந்தியாவில் அச்சுறுத்தி வரும் நிலையில், அது தொடர்பான விழிப்புணர்வை மத்திய அரசு மொபைல் ஃபோன் மூலம் ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில், தமிழகம் உள்பட இந்த ஒரு வாரத்தில் மட்டும் 39 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுக்கும் வகையில், மத்திய அரசு பிஎஸ்என்எல், ஜியோ செல்ஃபோன் நிறுவனங்கள் மூலம் புதிய விழிப்புணர்வு முயற்சியை தொடங்கியுள்ளது.
அந்த நிறுவனங்களின் செல்ஃபோன் எண்களை அழைக்கும்போது, அதில் ஆங்கிலம், ஹிந்தியில் பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் விழிப்புணர்வு செய்தி ஒலிக்கப்படுகிறது. இருமலுடன் தொடங்கும் அந்த குரல் பதிவில், இருமும்போதும், தும்மும்போதும் முகத்தை கர்ச்சீப் கொண்டு மறைக்க வேண்டும் என்றும், கைகளை தொடர்ந்து சோப்பு கொண்டு கழுவ வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு மீட்டர் இடைவெளியில் இருமல், காய்ச்சல் அல்லது சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டோர் இருக்கும்பட்சத்தில், உங்களது முகத்தையோ, கண்களையோ, மூக்கையோ தொடக்கூடாது என்றும், தேவைப்பட்டால் அருகிலுள்ள சுகாதார மையத்தை உடனடியாக அணுக வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த குரல் பதிவானது, எதிர் முனையில் அழைப்பை எடுக்கும் வரை ஒலிக்கப்படுகிறது.
பல்வேறு மொழிகளை கொண்ட இந்திய நாட்டில், விழிப்புணர்வு ஆடியோவை, அந்தந்த பிராந்திய மொழிகளில் இடம் பெறச் செய்தால், அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் கருதுகின்றனர். மேலும் வெப்பமான சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவாது என்பது இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் யாரும் அந்தக் கருத்தை நம்பி, அலட்சியத்தோடு செயல்பட்டு, நோய்ப் பரவுதலுக்கு வழிவகுத்துவிட வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஐயோ பாவம்’!.. ‘இன்னும் கொரோனா வலியே முடியல.. அதுக்குள்ள இப்டியா நடக்கணும்’.. சீனாவில் அடுத்து ஒரு சோகம்..!
- சென்னை விமான நிலையத்தில் 15 சிறுவனுக்கு கொரானோ அறிகுறி..! ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர பரிசோதனை..!
- ‘தமிழகத்திற்குள்ளும்’ நுழைந்த ‘கொரோனா’... ‘ஓமனில்’ இருந்த வந்த ஒருவருக்கு ‘வைரஸ்’ பாதிப்பு... அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ தகவல்...
- 'கொரோனா பாதிப்பு 31 ஆக உயர்வு'... '6 மாநிலங்களுக்கு'... 'மத்திய அரசு எச்சரிக்கை'!
- 'இந்த' வயசுல உள்ளவங்கள தான்... கொரோனா 'இஷ்டத்துக்கு' தாக்குதாம்... முழுமையான விவரம் உள்ளே!
- இந்தியாவில் ‘30 பேருக்கு’ கொரோனா பாதிப்பு... ‘அடுத்த’ அறிவிப்பு வரும் வரை... அலுவலகத்தை ‘மூடிய’ பிரபல ‘ஐடி’ நிறுவனம்...
- 'ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த பெண்'... ‘அறிவுறுத்தலை மீறி’...‘வெளியே சுற்றியதால்’... ‘அச்சத்தில் ஆழ்ந்துள்ள மக்கள்’!
- சிகிச்சை பலனின்றி 'என்ஜினியர்' பலி... கொரோனா வைரசால் உயிரிழந்தாரா?... வாட்ஸ்அப் 'வைரலால்' பொதுமக்கள் அதிர்ச்சி!
- 'ஃபுல் செக்கப் பண்ணியாச்சு...' 'ஜப்பானில் இருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி...' 'அவரது 'ரிப்போர்ட்' குறித்த புதிய தகவல்...!
- ‘கொரோனா அச்சத்தில் ஊரே காலியாக’.. ‘ஒரு குடும்பம் மட்டும் செய்த அதிர்ச்சி காரியம்’.. உறைந்து நின்ற அதிகாரிகள்!