‘மயங்கி கிடந்த நாய்’! ‘உடைந்திருந்த கதவு’ குடும்பத்தோடு கோயிலுக்கு போய்விட்டு வந்த கோவை கான்ட்ராக்டருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து பணம், நகை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இடையார்பாளையம் அப்பாஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (59). இவரது மனைவி சசி (50). கனகராஜ் பில்டிங் கான்ட்ராக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து மாலை வீடு திரும்பியபோது வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த அவரது நாய் மயங்கி கிடந்துள்ளது. மேலும் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்து வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. மொத்தமாக 130 சவரன் நகை, ரூ.15 லட்சம் பணம், 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டு டிவிஆர் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து, கொள்ளை அடித்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கோயிலுக்கு போய்விட்டு வீடு திரும்புவதற்குள் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எப்பவும் போலதான் அடிச்சேன்’ ‘ஆனா அப்பா...!’ ஒற்றை வரியில் மகன் சொன்ன பதில்..! சென்னையில் பரபரப்பு..!
- 'கட்டுகட்டாக' மாடியில் இருந்து வீசப்பட்ட ரூ.2000, ரூ.500 நோட்டுகள்..! அள்ளிச்சென்ற மக்கள்..! காரணம் என்ன? வைரலாகும் வீடியோ..!
- ‘யூ டர்ன் எடுத்த கார்’... ‘எதிரே வந்த பைக் மீது மோதியதில்’... 'இளைஞருக்கு நேர்ந்த சோகம்’!
- ‘வீட்டில் வேலை பார்த்து வந்த இளைஞர்’... 'செய்த காரியத்தால்'... ‘குடும்பத்தினருக்கு நேர்ந்த பரிதாபம்’!
- 'குழந்தையுடன் விளையாட போன தாய்'...'அசுர வேகத்தில் வந்த கார்'...பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- ‘7 வயது சிறுவனைக் கடத்திய 10ஆம் வகுப்பு மாணவன்’.. ‘சென்று பார்த்த போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி’..
- ‘எந்த டீம் கிட்ட எவ்வளவு ஏலத்தொகை இருக்கு?’.. ‘இன்னும் எத்தனை பேரை எடுக்க முடியும்?’.. ‘முழுவிவரம் உள்ளே’..
- 'அப்பா வாங்கிய கடன்'...'அம்மா'க்கு ஏன் கஷ்டம் கொடுக்கணும்'...'கல்யாண பெண்ணின் நெஞ்சை உருக்கும் சோகம்!
- 'இதெல்லாம் போலி நகை.. நாங்க யார் தெரியும்ல?'.. பிரபல டி.நகர் நகைக்கடையை மிரட்டி பணம் பறித்த கும்பல்.. பொறி வைத்து பிடித்த போலீஸார்!
- ‘சந்தேகத்தில் சென்று பார்த்த’.. ‘இளம்பெண்ணின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி’.. ‘கணவர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’..