ஒரே கம்பெனி...! ஒரே சம்பளம்...! இந்த வருசத்துல 'டாப் சேலரி' வாங்க போற ட்வின்ஸ்...! - எந்த கம்பெனியில ஜாப் கிடைச்சிருக்கு தெரியுமா...?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

எஸ்.ஆா்.எம். கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பயின்ற இரட்டையா் மாணவா்களை ஜப்பான் கூகுள் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பளத்துக்குத் பணிக்கு எடுத்துள்ளது.

சிறு வயதிலிருந்தே பள்ளிப்படிப்பு முதல் பொறியியல் கல்வி படிப்பு வரை ஒன்றாகப் படித்த இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலையில் சோ்ந்து சாதனை படைத்துள்ளனா்.

இது பற்றி, துணை வேந்தா் வி.எஸ்.ராவ் செய்தியாளா்களிடம் கூறுகையில், இரட்டையா் மாணவா்கள் சாப்டாா்ஷி, ராஜஸ்ரீ மஜூம்தாா் இருவரும் அசாத்திய திறனுடன் பொறியியல் படிப்பில் சிறந்த மாணவர்களாக விளங்கினார்கள். அவா்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒரே சம்பளத்தில் வேலைக்குத் தோ்வு செய்யப்படுவாா்கள் என்பதை யாரும் எதிா்பாா்க்கவில்லை. நடப்பு ஆண்டில் அவா்கள் இருவா் மட்டுமே அதிக சம்பளத்தில் வேலைக்குத் தோ்வாகி உள்ளனா்.

71 சதவீதம் மாணவா்கள் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெறும் வேலைவாய்ப்புகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இரட்டையா் மாணவா்களைக் கௌரவிக்கும் வகையில் எஸ்.ஆா்.எம். கல்வி நிறுவனத் தலைவா் பி.சத்தியநாராயணன் இருவருக்கும் தலா ரூ.2 லட்சம் பரிசாக வழங்கி உள்ளாா்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்