கொரோனா வைரஸ் 9 மணி நேரம் 'அங்க' உயிரோட இருக்கும்...! 15 செகண்ட்ல அழிக்கணும்னா 'அத' யூஸ் பண்ணினா போதும்...! - ஜப்பான் பல்கலைகழகம் வெளியிட்ட ஆய்வு முடிவு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து நாள் ஒரு செய்தியும், ஆராய்ச்சி முடிவுகளும் வந்துக்கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் தற்போது  kyoto prefectural university of medicals வெளியிட்டுள்ள கொரோனா ஆய்வறிக்கையின் படி கொரோனா வைரஸானது மனிதர்களின் தோல் மீது 9 மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும் எனவும், மேலும் எத்தனால் பயன்படுத்துவதன் மூலம் சுமார் 15 வினாடிகளுக்குள் அவை அழிந்து விடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வறிக்கையின் முடிவில் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் உடல் தோல்பகுதிகளில் அதிக நேரம் உயிர்ப்புடன் இருப்பதால் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும், இதனை தடுக்க கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் அனைவரும் பின்பற்றினால் மட்டுமே இனி ஏற்படும் அபாயத்தை தவிர்க்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்