"வீடு இல்லன்னு கிண்டல் பண்ணுவாங்க.. எப்படியாச்சும் பெரிய 'டாக்டர்' ஆகணும்.." பெரும் கனவுகளுடன் பிளாட்ஃபார்மில் வசிக்கும் சிறுமி! வீடியோ

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொதுவாக, யாராக இருந்தாலும் வயது பாகுபாடு இல்லாமால், பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற கனவும், லட்சியமும் இருக்கும்.

"வீடு இல்லன்னு கிண்டல் பண்ணுவாங்க.. எப்படியாச்சும் பெரிய 'டாக்டர்' ஆகணும்.." பெரும் கனவுகளுடன் பிளாட்ஃபார்மில் வசிக்கும் சிறுமி! வீடியோ
Advertising
>
Advertising

Also Read | "காலையில் நடனம் ஆடிய கல்யாண பொண்ணு.." கட்டுன மஞ்சள் தாலி ஈரம் கூட காயல ‌.. துக்கத்தில் ஆழ்த்திய சோகம்!

அதில் பலரும் தங்களின் லட்சியத்தை நோக்கி கடினமாக உழைத்து, வெற்றிக் கொடியையும் நாட்டுவார்கள். ஆனால் அந்த பாக்கியம், கடினமாக உழைக்கும் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது.

என்ன தான் அவர்கள் உழைத்தாலும், இலட்சியத்தை அடைவதற்கு ஏதாவது ஒரு விஷயம், மிகப் பெரிய தடையாக இருக்கும்.

அந்த வகையில், வீடு, வாசல் எதுவும் இல்லாமல் சிறுமி ஒருவர், தன்னுடைய தடைகள் கடந்து, வாழ்வில் பெரிய ஆளாக மாறி சாதிக்க வேண்டும் என துடிப்புடன் இருப்பது பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. இது தொடர்பான, Exclusive நேர்காணல் ஒன்றை Behindwoods வெளியிட்டுள்ளது.

வீடு இல்லாதனால..

அதில் பேசும் சிறுமி ஜனனி, "என்னுடன் பள்ளியில் படிக்கும் சக மாணவ மாணவிகள், எனக்கு வீடு இல்லாததை பற்றி அதிகமாக கிண்டல் செய்வார்கள். அவர்களுக்கு வீடு இருந்து கிடைக்கும் விஷயங்களை என்னுடன் ஒப்பிட்டு, ஏதாவது பேசுவார்கள். அதே போல, வாலிபால் ஆடவும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், ஷூ இல்லாத காரணத்தால் நான் ஆடவும் போவதில்லை. ஒருமுறை கிழிந்த ஷூ வைத்துக் கொண்டு ஆடினேன். ஆனால், நல்ல ஷூ பயன்படுத்தி தான் ஆட வேண்டும் எனக் கூறியதால், இப்போது நான் விளையாடப் போவதில்லை.

டாக்டர் ஆகி சாதிக்கணும்..

இதே பிளாட்ஃபார்ம் பகுதியில் தான் குளித்து தயாராகி விட்டு, நான் பள்ளிக்கூடம் செல்வேன். தினமும் பள்ளிக்கூடத்தில் கிடைக்கும் சத்துணவு சாப்பாடு தான். எனக்கு படித்து டாக்டர் ஆக வேண்டும் என ஆசை. அம்மா, தாத்தா, பாட்டி என அனைவரையும் பெரிய ஆளாகி, நான் நல்லபடி பார்த்துக் கொள்ள வேண்டும்" என சிறுமி ஜனனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முழு வீடியோவைக் காண:

LIVING IN PLATFORM, GIRLS, சிறுமி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்