'100 அடி ஆழம்'... 'கிணற்றுக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளை!'... 'என்ன நடந்தது?'... 'புதுக்கோட்டையில் பரபரப்பு'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கிணற்றுக்குள் விழுந்து தவித்துக் கொண்டிருந்த ஜல்லிக்கட்டு காளையை ஒருமணி நேரத்தில் விரைந்து வந்து தீயணைப்புத்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர், விவசாயி கோனார். பசு மாடுகள், ஆடுகள் முதலிய கால்நடைகளை வளர்த்து வரும் இவர், ஜல்லிக்கட்டு பயிற்சிக்காக காளையை அவிழ்த்துவிட்டு, அவசர வேலையாக வெளியே சென்றுள்ளார்.

இந்நிலையில், அவிழ்த்துவிடப்பட்ட காளை மேய்ச்சலுக்காக செல்லும்போது, எதிர்பாராத விதமாக அவரின் விவசாய நிலத்தில் இருந்த 100 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. கிணற்றுக்குள் விழுந்த காளை சத்தம் போட்டதால், பொது மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

காளையை கிணற்றிலிருந்து மீட்க பொதுமக்கள் சிலர் முயற்சி செய்தனர். ஆனால், முயற்சிகள் பலனளிக்காததால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

ஒருமணி நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தொடர் போராட்டத்திற்குப் பிறகு காளையை பத்திரமாக மீட்டனர். துணிச்சலுடன் மிக விரைவாக காளையை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

JALLIKATTU, WELL, FIREMEN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்