Jailer : முத்துவேல் பாண்டியனுடன் மலைக்கோட்டை வாலிபன்.. ரஜினி & மோகன்லால் சந்தித்த வைரல் ஃபோட்டோவில் உடன் இருப்பவர் இவரா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "மொதல்ல இத Delete பண்ணுங்கப்பா".. ரசிகர் கேட்ட கேள்வி.. தினேஷ் கார்த்திக் கொடுத்த வைரல் ரியாக்ஷன்!!
இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார்.
மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார். இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்துள்ளார் என சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
மேலும், படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மாரில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகியோர் சந்தித்திருக்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இந்த ஃபோட்டோவில் ரஜினி மற்றும் மோகன்லால் இருவருக்கும் இடையில் இருக்கும் தயாரிப்பாளர் யாரென்கிற சில தமிழ் ரசிகர்களிடையே இருந்துவந்தது.
மோகன்லால், 'ஜெயிலர்' மட்டும் அல்லாது லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் ராஜஸ்தானில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த மலைக்கோட்டை வாலிபன் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரும் செஞ்சூரி பிக்சர்ஸ் நிறுவனருமான கொச்சுமோன் தான் ரஜினி மற்றும் மோகன்லால் இவருக்கும் இடையில் நிற்கிறார்.
Also Read | இந்த பாட்டு வேண்டாம்.. கல்யாண வீட்டுல வந்த தகராறு.. வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஜூடோ ரத்னம் மறைவு..."மறக்க முடியாத சரித்திரம்".. அஞ்சலி செலுத்தி ரஜினிகாந்த் உருக்கம்..!
- "இந்த 3 பழக்கமும் உள்ளவங்க 60 வயசுக்கு மேல வாழ்ந்தது இல்ல.. என்னை மாத்துனது மனைவி தான்..".. ரஜினிகாந்த் உருக்கம்!!
- ‘அதை கொடுங்க’.. சென்னை ஏர்போர்ட்டில் ரசிகர் போர்த்திய பொன்னாடை.. காரில் ஏறும்முன்பு கேட்டுவாங்கிய ரஜினி! ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து!
- ரொம்ப நாளைக்கு அப்புறம்... சந்திரபாபு நாயுடுவை சந்தித்த ரஜினிகாந்த் .. ஃபோட்டோ பகிர்ந்து ட்வீட்..!
- Rajinikanth : “அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு”.. அமைச்சர் உதயநிதிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து..!
- Baba: “பாபா ரஜினி சார் தயாரிப்பு.. ஓடிடில இல்ல.. ரீ ரிலீஸ் ஆனா அண்ணாமலை, பாஷா மாதிரி ஹிட் ஆகும்.” - சுரேஷ் கிருஷ்ணா..!
- “ரஜினி சாரை அப்படி கவுண்ட்டர் அடிக்க யாராலும் முடியாது.! கவுண்டமணி தான் வேணும்னு முடிவா இருந்தாரு” - சுரேஷ் கிருஷ்ணா EXCLUSIVE
- சூப்பர்ஸ்டார் குரலில் "சுவாமியே சரணம் ஐயப்பா".. சபரிமலையில் ரஜினிகாந்த்.. இணையத்தை கலக்கும் அரிய வீடியோ!! Throwback
- ஆளுநர் இல.கணேசன் இல்ல விழா.. ஸ்டைலாக வந்திறங்கிய நடிகர் ரஜினிகாந்த்..!
- "தலைவரை எப்படியாவது பார்த்துடனும்".. பாகிஸ்தானை கலக்கும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்.. வைரல் Pics..!