“இந்த பொண்ணு சொல்றது உண்மையா?”.. ‘தூங்கும்போது ஐ.டி கணவருக்கு வந்த போன் கால்!’.. தப்பை மறைக்க கணவர் செய்த கொடூரம்!.. மனைவி எடுத்த விபரீத முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது எருமனூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாருக்கும் கள்ளக்குறிச்சி நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனாவுக்கு இடையே 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் 85 ஆயிரம் சம்பளத்துக்கு பணிபுரிந்த விஜயகுமாருக்கும்  திருமணத்தின்போது 50 சவரன் நகைகளும், 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனமும் வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் வரதட்சணையாக பெண் வீட்டார் அளித்துள்ளனர். இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், ஷோபனாவை அவரது மாமியார் வரதட்சணை கேட்டு ஆபாச வார்த்தைகளால் வசைபாடியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே விஜயகுமார் ஐ.டி வேலையை இழந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

இதனிடையே தூங்கிக் கொண்டிருந்த விஜயகுமாரின் செல்போனுக்கு ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அழைத்து பேசியுள்ளார். அதை ஷோபனா அட்டென் செய்ய, அப்பெண்ணோ தான் விஜயகுமாரின் காதலி என்று கூறி 41 நிமிட உரையாடலில் விஜயகுமாரின் காதல் லீலைகளை அம்பலப்படுத்தியுள்ளார். தூங்கி எழுந்த விஜயகுமார், நடந்ததை அறிந்ததும், மனைவியிடம் சிக்கியதை மறைத்துக்கொண்டு, வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து உதைத்துள்ளார். இந்த கடும் செயலால் வேதனை அடைந்த ஷோபனா, வேதனையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்